நியூஸ் வே



*சினிமாவுக்காக ஒரிஜினல் பிரசவக் காட்சியை படமாக்க பர்மிஷன் கொடுத்தது, ஒரு எம்.பி. மேடையில் சில்மிஷம் செய்துவிட்டார் என்று சீறியது என பரபரப்பின் ஃபாரன்ஹீட்டை ஏற்றிய ஸ்வேதா மேனன், பாக்யராஜ் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் ‘துணை முதல்வர்’ படத்தில் பாக்யராஜின் மனைவியாக நடிக்கிறார்.

*‘கரகாட்டக்காரன்’ புகழ் சண்முகசுந்தரத்துக்கு காலம் போன நேரத்தில் யூத் ஹீரோயின் ஒருவருடன் ஜோடி போடும் ஆசை இருக்கிறதாம். அவர் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை, ப்ரியா ஆனந்த்.

மதுரையில் மிகப் பெரிய மாளிகை கட்டி வருகிறார் வடிவேலு. காமெடியன் களில் இவ்வளவு பெரிய வீட்டை யாருமே கட்டி யதில்லையாம். வீட்டிற் கான செலவு இதுவரை 12 சி ஆகிவி ட்டது என்கிறார்கள். சென்னை யிலும் விவேக் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை வாங்கிப் போட்டு விட்டார் வடிவேலு.

*ஆர்யா தன் திருமணத்தைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதால் அவர் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். சொந்தத்திலேயேதான் திருமணம்.

*டைரக்டர் பாலா இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே படம் ஆரம்பித்திருக்க வேண்டியது. ஹீரோ சசிகுமார் இன்னும் ‘பிரம்மனை’ முடிக்கவில்லை. அனேகமாக பிப்ரவரியில் சசிகுமாரை தன் கஸ்டடியில் எடுக்கிறார் பாலா. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கிரிப்ட்டில் நுணுக்கம் சேர்க்கிறார். பழைய யூனிட்டில் செழியன், ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டிப்பாக உண்டு.

இளையராஜா நன்றாகத் தேறி விட்டார். ‘‘20 நாள் ஓய்வு மட்டும் போதும்’’ என சொல்லிவிட்டார்களாம். பவதாரிணி, கார்த்திக்ராஜா, யுவன் மூவரும் அப்பாவிற்கு பக்கத்திலேயே இருக்கி றார்கள். ஆர்மோனியத்தை விட்டு சந்தோஷச் சிரிப்பில் ஆழ்ந்திருக்கிறார் இளையராஜா. பாரதிராஜா யுவனிடம் ராஜாவின் உடல்நலத்தை அக்கறை யோடு விசாரித்திருக்கிறார்.

இளையராஜா நன்றாகத் தேறி விட்டார். ‘‘20 நாள் ஓய்வு மட்டும் போதும்’’ என சொல்லிவிட்டார்களாம். பவதாரிணி, கார்த்திக்ராஜா, யுவன் மூவரும் அப்பாவிற்கு பக்கத்திலேயே இருக்கி றார்கள். ஆர்மோனியத்தை விட்டு சந்தோஷச் சிரிப்பில் ஆழ்ந்திருக்கிறார் இளையராஜா. பாரதிராஜா யுவனிடம் ராஜாவின் உடல்நலத்தை அக்கறை யோடு விசாரித்திருக்கிறார்.

*சந்தானம் மலையாளப் படம் ஒன்றில் நடித்துவிட்டது பழைய செய்தி. தெலுங்கின் மகேஷ்பாபு, சந்தானத்தின் நெருங்கிய நண்பர். தன் படத்தில் பிரம்மானந்தத்திற்கு மகனாக நடிக்க சந்தானத்தை கேட்டு இருக்கிறாராம். ‘‘யோசித்து சொல் கிறேன்’’ என சொல்லி யிருக்கிறார் சந்தானம்.

‘இரண்டாம் உலக’த்தில் நுழைந்த துயரங்களை மறந்துவிட்டு சிம்பு படத்திற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் செல்வராகவன். முற்றிலும் இளமையான காதல் கதைதான் களம். சிம்புவின் தற்போதைய இரண்டு படங்கள் முடிகிறவரைக்கும் ஸ்கிரிப்ட்தான் வேலையாம்.

*திரு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முத்துக்காட்டில் 30 லட்சம் செலவில் தேவாலயம் ஒன்றை செட் போட்டு படமாக்கியுள்ளனர். அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவாலயத்தை பார்வையிட, பொங்கல் வரை அந்த செட்டைப் பிரிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் விஷால்.

‘எதிர்நீச்சல்’ ஹிட்டடித்தபோதே ‘‘இந்தக் கூட்டணி மறுபடி இணையும்’’ என்று சொல்லியிருந்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் தயாரிப்பாளர் தனுஷ். துரை செந்தில்குமாரின் இயக்கம், அனிருத்தின் இசை, ஹீரோ சிவகார்த்திகேயன் என்று ‘எதிர்நீச்சல்’ யூனிட் மொத்தமும் புதுப்படத்தில் இணைந்தாலும், கதாநாயகி மட்டும் ப்ரியா ஆனந்த் இல்லை. அந்த இடத்தில், அமலாபால்!

*லாரன்ஸ் இயக்கிவரும் ‘முனி’ பார்ட் 3யான ‘கங்கா’வில் அஞ்சலிக்கு ஒரு ரோல் ஒதுக்கப்பட்டிருந்தது. சொந்தப் பிரச்னையால் அவர் கால்ஷீட் சொதப்பியதால், அஞ்சலி இடத்தில் நித்யா மேனனை நிரப்பி ஷூட்டிங் போய்விட்டார் லாரன்ஸ்.

ஓவியா சென்னையில் வீடு வாங்கித் தங்க ரெடியாகி விட்டார். ‘களவாணி’க்குப் பிறகு அவருக்கு பெயர் தருவது மாதிரி படங்கள் இல்லாததால், தேடலை ஆரம்பிக் கத்தான் இந்தத் திட்டம். ‘‘சாலி கிராமத்தில் நல்ல வீடாக இருந்தால் சொல்லுங்க’’ - இதுதான் பேட்டி கொடுத்தவுடன் அவர் கேட்கிற விஷயம்.

*புது வீடு ராசி தனக்கு நன்றாக வந்திருப்பதாக நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிம்பு. தங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பது கனஜோராக நடக்கிறதாம். ‘‘தம்பி குறள் மியூசிக்கில் இறங்கி விட்டான்; நானும் நல்லதாக இரண்டு படங்களில் நடிக்கிறேன்’’ என்று புது வீட்டின் ராசிகளாக அடுக்குகிறார் சிம்பு.

*தமிழ்ப் புத்தாண்டிற்கு ஷங்கரின் ‘ஐ’ வருவது உறுதி. அதே தினத்தில்தான் தள்ளிக்கொண்டே போகும் ‘கோச் சடையானு’ம் முழுமை அடைந்து வரும் என்கிறார்கள். ஆனால்  கவலை ப்படாமல் ‘ஐ’யை இறக்க முடிவு செய்துவிட்டார்கள். விக்ரமின் இரண்டு வருட தனிமையை முறிக்கிற படமாச்சே... சும்மாவா!

சைலன்ஸ்

இளைய இசையை ஒரு படத்திற்காக புக் பண்ணுவதே பெரிய விஷயம். எப்போது மியூசிக் அறைக்கு வருவார் என யாருக்குமே தெரியாது. அவரது இரண்டாவது கல்யாணமும் ஒர்க் அவுட் ஆகாததுதான் பெரிய பிரச்னை என்கிறார்கள். ‘‘எப்படியும் இந்த திருமணத்தை சரி செய்யப் பார்த்தும் ஒன்றும் நம்பிக்கையாய் அமையவில்லை’’ என வருந்துகிறார்கள் நெருக்கமானவர்கள். இது இளைய இசையை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதுதான் இசை ரசிகர்களுக்குக் கேள்விகளோடு கூடிய கஷ்டம்!

மறுபடியும் டைரக்டரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டார் அந்த பறவை நடிகை. வீட்டில் நடந்த சண்டையிலும் அந்த டைரக்டர் ஜெயித்து விட்டாராம். அனேகமாக இந்த வருஷக் கடைசியில் டும்... டும்... நடக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். ஆனால், நடிகையின் தாய்க்குலம் இப்போது கல்யாணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதுதான் எதிர்பாராத ட்விஸ்ட்!