வாழ்க்கைல நிம்மதி இல்லன்னா, கொசு கடிச்சாக் கூட அணுகுண்டு விழுந்தா மாதிரிதான் இருக்கும்!
- கார்த்திக் லட்சுமணன் ஆரெம்
கவனமாய் அழி,
என் குறுஞ்செய்திகளில் ஏதோ ஒன்றில் நான் என் உசிரை அனுப்பக்கூடும்
- இரா எட்வின்
அன்பு...
பல கதவுகளின் வழியாக
வரத்தான் செய்கிறது
நாம்தான்
கதவுகளைத் திறக்கத்
தயாராயில்லை
- ராதா கிருஷ்ணன்
புளிய மர உச்சியில் பேய்கள்... அதுங்களுக்கும் டவர் சரியா கிடைக்கலியோ?
- ஹன் ஸா
காதல் என்பது கான்க்ரீட் மாதிரி... மிதிச்சாலும் அச்சு மட்டும்தான் விழும்!
கல்யாணம் என்பது களிமண் மாதிரி... மிதிக்க மிதிக்க புதைஞ்சுட்டேதான் இருக்கணும்!
- சித்தன் கோவை
உங்கள் வாழ்வில் யார் எல்லாம் வாசல் வழியாக வருவார்கள் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை... ஆனால், யாரையெல்லாம் தூக்கி ஜன்னல் வழியாக வீச வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
- இளையராஜா டென்டிஸ்ட்
தனக்கே தனக்கான எதிர்காலம் மற்றவர்களை நம்பி இருப்பதாக நினைப்பதில் தொடங்குகிறது முதல் ஏமாற்றம்...
- செய்குல் ஃபியஸ்
ஒரு ஆண் மனிதனாகப் பிறந்து, சாத்தானாக வாழ்ந்து, கடவுளாக மரணிக்கிறான்.
ஒரு பெண் இந்த மூன்று நிலைகளிலும், வெறும் உடலாகவே கடந்து வருகிறாள்.
- சிந்தன் ரா
அடிக்கும் கரங்கள் பொறுத்து வேறுபடும் ஆலயமணியின் நாதங்கள் (சுமந்து வரும் காற்றுக்கில்லை பேதங்கள்)
- கலாப்ரியா
எந்த வயதிலேயும் காதல் நம்மை பூமியிலிருந்து ஒரு அரை அடி உயரத்திலே மிதக்க விடத்தான் செய்கிறது!
#நாம எம்புட்டு வெயிட்டா இருந்தாலும்...
- நித்யா கந்தசாமி
என் பாவங்களை அறிக்கையிடுவதில் உள்ள மடத்தனம் அதை ஒளித்து வைப்பதிலும் இருக்கிறது!
- மஹிந்தீஷ் சதீஷ்
மார்கழி மாத அதிகாலை பில்லியன் ரைடர், ஊதக்காத்து நடுக்கும், கன்னமும் காதும் விறைத்த நேரம்... திருமயம் கபே வாசலில் எதுக்குடா இத்தனை பூரி எண்ணெய் சொட்ட சொட்ட பளபளக்க அடுக்கி வெச்சீங்க?
- ஜீவா நந்தன்
இந்த வருஷமாச்சும் ஓசில வர்ற டைரியை முழுசா பயன்படுத்தணும்!
# புத்தாண்டு சபதம்...
- ஈரோடு கதிர்
வ.உ.சி., கட்டபொம்மனை திரையில் கொண்டு வந்தது சிவாஜி என்றால், எமதர்மனை திரையில் கொண்டுவந்தது வினு சக்கரவர்த்தி!
#ஆங்...
- தமிழ் கே செந்தில்
twitter வலைப்பேச்சு
@ meensmini
ஆயுள் ரேகை தேயும் வரை உழைத்தால்தான் ஆயுள் பெருகும்.
# பபி
@ raajaacs
என் முறை வருமென்று எத்தனை முறைதான் காத்திருப்பது?
@ Alexxious
நிரப்பவே முடியாது என தெரிந்திருந்தாலும், அந்த வெற்றிடத்தை நிரப்ப மேற்கொள்ளப்படும் பிரயத்தனங்களில் எஞ்சியிருக்கிறது வாழ்க்கை!!
@ sethu_ss
இறந்தபின்தான் இயற்கை வளம் பேசப்படுகிறது, நம்மாழ்வார் விஷயத்திலும்!
@ senthazalravi
கேவுறு கூழ கம்மங்கூழ விட்டு அரிசிக்கும் இட்லிக்கும் இப்ப ப்ரெட்டுக்கும் கெலாக்ஸுக்கும். மன்னிச்சிருங்க இயற்கையோடு கூடிவிட்ட நம்மாழ்வாரே!
@ SeSenthilkumar
இயற்கை எய்தினார் என்ற சொற்றொடர் மிகச் சரியாகப் பொருந்துவது அன்புத்தாத்தா நம்மாழ்வாருக்கு மட்டும்தான்!
@ GoundarReturns
ஐயாயிரம் வருஷமா எகிப்து காரன் மம்மிய மண்தாழில பதப்படுத்தினான்னா, அஞ்சி மாசமா எங்க மம்மி மண்சட்டில ஊறுகாய பதப்படுத்தி வச்சிருக்கு.
# மம்மிடா
@ pugalmani55
தமிழ்நாட்டுக்கு இலவச மின்சாரம் என்ற அறிக்கை வந்தாலும் வரலாம்!
# இல்லாத பொருளை இலவசமாகத் தந்தால் என்ன, தராவிட்டால் என்ன!
@ manipmp
அடுத்த வருஷமாச்சும் உலகம் அழிவது உறுதியாகத் தெரிந்தால், தைரியமாகக் கடன் வாங்கலாம்!
@ thoatta
வாழ்க்கைல கஷ்டம் வரப்ப 56789க்கு கூப்பிடச் சொல்றாங்க ஏர்டெல்காரங்க, கல்யாண வாழ்க்கைக்கு டிப்ஸ் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்!
@ writernaayon
சினிமால ஒரே பாட்டுல பணக்காரனாகுறாங்க, உடம்பு இளைக்கிறாங்க. அந்த பாட்டு நம்ம வாழ்க்கைல இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்!
@ Anandraaj04
கூகிள்ல இடத்தையெல்லாம் சரியாத்தான் சொல்றாய்ங்க. ஆனா போய்ச் சேர்ற நேரத்தைத்தான்
‘ஃப்ளைட்ல’ போறதா நெனச்சி சொல்லிடுறாய்ங்க போல!
@ urs_priya
நினைப்பதற்கும் முடிப்பதற்கும் உள்ள கால இடைவெளியே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது!
@ iVedhaLam
இந்த பிறந்த நாள், நினைவு நாள் கான்செப்ட்டெல்லாம் இல்லாட்டி பல பேர எப்பவோ மறந்திருப்போம் நாம...
@ saysatheesh
டுயல்சிம் போனில் ஒரு சிம் போட்டு யூஸ் பண்றவனையும், சிங்கிள் சிம் போனில் மாத்தி மாத்தி ரெண்டு சிம் யூஸ் பண்றவனையும் ஒருங்கே கொண்டது இச்சமூகம்!
@ senthilcp
ரஜினிக்கு வாய்த்திருக்கும் கடைசி வாய்ப்பு... தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சிக்குத் தலைமை ஏற்க முன் வருவதே!