தத்துவம் மச்சி தத்துவம்
‘‘நம்ம டாக்டர் பழசை மறக்க மாட்டார்...’’ ‘‘அதுக்காக வாரத்துல ஒருநாள் வார்டு பாய் டிரஸ்ல வரணுமா..!’’ - அ.ரியாஸ், சேலம்.
‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது நல்லதாப் போச்சா... எப்படிச் சொல்றே?’’ ‘‘மேடையில இப்பல்லாம் அரசியல் பத்தி பேசாம, ‘ஹெல்த் டிப்ஸ்’ சொல்றாரு..!’’ - ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.
‘‘மாநில அளவுல அரசியல் பண்ணிக்கிட்டு இருந்த நம்ப தலைவர், இப்ப தேசியத் தலைவரா ஃபார்ம் ஆயிட்டார்...’’ ‘‘எப்படிச் சொல்றீங்க?’’ ‘‘இப்பல்லாம் அவரை வெளிமாநிலங்கள்லகூட திட்ட ஆரம்பிச்சிட்டாங்களே..!’’ - வி.ரேவதி, சென்னை-59.
ஆத்து மணலை பொக்லைன் வச்சித்தான் அள்ள முடியும். ஆன்லைன் மூலமா அள்ள முடியுமா? - ஆத்தங் கரையில் லைன் வீடு கட்டி விளையாடுவோர் சங்கம் - டி.செல்வன், நெல்லையப்பபுரம்.
‘‘தலைவர் இப்பதானே கட்சி தாவி கார் வாங்கினார்... மறுபடி ஏன் கட்சி தாவறார்?’’ ‘‘அந்தக் கார் பழசாயிடுச்சாம்..!’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
என்னதான் ‘ஆயிரம்’கால் மண்டபமா இருந்தாலும், அதனோட ஆயிரம் கால்ல ஒரு காலையாவது வச்சு ஒரு அடி நடக்க முடியுமா? - கால் டாக்சிக்கு காசில்லாமல் காலாற நடப்போர் சங்கம் - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘சார்... எங்க வீட்ல நேத்து வந்து திருடினவன் அங்க அடையாளம் சொல்லவா..?’’ ‘‘தேவையே இல்லே... மாமூல் வந்துடுச்சு!’’ - டி.சேகர், திருத்துறைப்பூண்டி.
|