‘‘புது ஜெயிலை திறந்து வச்சு தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘ ‘முதல் கைதியா நீங்களே வரணும்’னு ஜெயிலர் கேட்டுக்கிட்டாராம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.
‘‘இந்த ஜாதகப்படி உங்க பையனுக்கு பதவி கிடைக்கும்... ஆனா அதிகாரம் வேற ஒருத்தர் கைல இருக்கும்!’’
‘‘அப்படீன்னா என் பையன் ‘பிரதமர்’ ஆயிடுவான்னு சொல்றீங்களா..?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘நம்ம கபாலி ஒழுங்கா மாமூல் தர்றானான்னு இன்ஸ்பெக்டருக்கு டவுட் வந்துடுச்சு...’’
‘‘அதுக்காக?’’
‘‘ஏட்டய்யா தலைமையில
‘கபாலி கண்காணிப்புக் குழு’ அமைக்கப் போறாராம்!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘என்னதான் நடிகையாக இருந்தாலும், இப்படியெல்லாமா கல்யாணப் பத்திரிகையை அச்சடிக்கறது..?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘இந்தத் திருமணம் எதிர்கால விவாகரத்துக்குட்பட்டதுன்னு பின்
குறிப்பு போட்டிருக்கே!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.
‘‘ஆனாலும் தலைவர் இவ்வளவு
வெளிப்படையா இருக்கக் கூடாது...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘தொண்டர்கள் ‘கட்சி தாவ அங்கீகாரம் கொடுக்கும் ஒரே கட்சி’ன்னு விளம்பரம் பண்ணியிருக்காரே!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘பையன் விளம்பரத்துறையில இருக்கறான்னு சொல்லி ஏமாத்திட்டாங்க...’’
‘‘ஏன்... பையன் அப்படி இல்லையா?’’
‘‘பஞ்சாயத்துல தண்டோரா போடுறதைத்தான் அப்படிச் சொன்னாங்களாம்..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘தலைவர் ஊருக்கு ஊர் பொதுக் கூட்டம் போடறதை ஏன் சுத்தமா நிறுத்திட்டாரு..?’’
‘‘செருப்புக்கு பதிலா இப்பல்லாம் கருங்கல்லும் பெட்ரோல் குண்டும் வீச ஆரம்பிச்சிட்டாங்களாம்..!’’
- சரவணன், கொளக்குடி.