‘‘பக்கத்துல ஏதாவது ஜெயில் இருக்காய்யா..?’’
‘‘சூப்பர் தலைவரே... இப்ப நீங்க சிறை ‘வாச’த்துல எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்க!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘தலைவர் பற்றி எடுத்த ஆவணப்படத்துல முழுக்கவும் தலைவர் திமிராவே பேசறார்...’’
‘‘அப்ப அதை ‘ஆணவப்’ படம்னு சொல்லு..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘ஆனாலும் இந்த இன்ஸ்பெக்டர் ஓவரா போறார்...’’
‘‘ஏன் அப்படிச் சொல்றே கபாலி?’’
‘‘மாமூல் உயர்வை அறிவிச்சிட்டு, அது ‘இன்னைக்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்’னு சொன்னாரே..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
‘‘அவரை போலி டாக்டர்னு ஏன் சொல்றே..?’’
‘‘இங்கே தைராய்டு, ஆண்ட்ராய்டு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்னு போர்டு வச்சிருக்காரே..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
‘‘என்னய்யா... குற்றப் பத்திரிகையில கடைசிப் பக்கத்தை கிழிச்சுட்டுத் தர்றே..?’’
‘‘கிளைமாக்ஸ் சஸ்பென்சா இருக்கட்டுமேன்னுதான் தலைவரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘அந்த டாக்டர் ஆனாலும் ரொம்ப ஃபீஸ் வாங்கறாராம்...’’
‘‘நிஜமாவா..?’’
‘‘ஆமாம்! ஸ்கூல் ஃபீஸை விட அதிகம் வாங்கறார்னா பாருங்களேன்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தேர்தலில் நின்னு வீணா செலவு பண்ணாம, அந்தப் பணத்தை ஏதாவது
ஃபைனான்ஸ் கம்பெனில போடணும்னு என் மனைவி சொல்லிட்டா...’’
‘‘எப்படிப் பார்த்தாலும் உங்க டெபாசிட் காலியாகிடும்
தலைவரே!’’
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.