தத்துவம் மச்சி தத்துவம்





கண்களை இங்கிலீஷ்ல ‘ஐஸ்’னு சொல்றோம்... அதுக்காக அதுல வர்ற கண்ணீரை ‘ஐஸ் வாட்டர்’னு சொல்ல முடியுமா..?
- ஜில்லென்று கேள்வி கேட்டு சிந்திக்க வைப்போர் சங்கம்
- ஜே.தனலட்சுமி, கோவை.

‘‘முதுகில் ஒரு மச்சமும், வலது தொடையில் ஒரு மச்சமும் உள்ள, சற்றே மாநிறம் கொண்ட 24 வயது சாராஸ்ரீ என்கிற சரோஜாவுடன் ஆபாச வீடியோவில் இருப்பது நானல்ல என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்...’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘அந்த சாமியாரை ஏன் ஊரை விட்டு துரத்தினாங்க..?’’
‘‘பவர்கட் சமயத்திலே ‘இருள்வாக்கு’ சொல்லி, பல ‘இதயங்களைத் திருடிட்டு’ப் போக இருந்தாராம்...’’
- அ.ராஜப்பன், கோவை.

‘‘தலைவர் மைக்கைப் புடிச்சிக்கிட்டு பேசாம, வாயை மட்டும் அசைக்கிறாரே... ஏன்?’’
‘‘எதைப் பேசினாலும் அவதூறு வழக்கு போடறாங்களாம்..!’’
- மேடை மெய்யப்பன், சென்னை-92.

‘‘நம்ம தலைவர், நடைபயணத்துக்கு தொண்டர்களை செலக்ட் பண்ற லட்சணத்தைப் பாரு...’’
‘‘என்ன செய்தார்..?’’
‘‘ஒரு குவாட்டருக்கு எவ்வளவு மைலேஜ் குடுப்பேன்னு தொண்டர்கள்கிட்ட கேட்கறாரு!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘இந்த ஜோசியர் விசேஷமானவர்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘கனவுல சமந்தா வந்தா என்ன பலன், ஹன்சிகா வந்தா என்ன பலன்னு கரெக்டா சொல்வாராம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘எப்ப கைது பண்ணாலும், கையில காப்பு போடக் கூடாதுன்னு கபாலி சொல்றானே... ஏன் ஏட்டய்யா?’’
‘‘காப்புரிமை வாங்கி இருக்கானாம்..!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.