ஜோக்ஸ்





‘‘கபாலிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ‘பாலிஸி’ என்ன ஏட்டய்யா..?’’
‘‘மாமூலை வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் தர்றதுதான்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘இந்த பேஷன்ட் சரியான சினிமா பைத்தியம் போல...’’
‘‘எப்படிச் சொல்றீங்க டாக்டர்..?’’
‘‘பாதி ஆபரேஷன்ல ஆபரேஷன் தியேட்டர்ல கரன்ட் கட்டான உடனே விசிலடிக்கறாரு!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘ஹலோ, பொண்ணு பார்த்துட்டுப் போனீங்களே... எங்க பொண்ணை உங்க பையனுக்குப் பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லவே இல்லையே?’’
‘‘ஃபேஸ்புக்ல லைக்ஸ் போட்டிருக்கானே... இன்னும் பார்க்கலியா?’’
- லெ.நா.சிவகுமார், சென்னை-33.

ஸ்பீக்கரு...


‘‘தலைவருடைய கால் அளவு என்ன என்பதை நாங்கள் பல முறை அறிவித்தும், அவரது கால்களுக்குப் பொருந்தாத செருப்பை வீசும் எதிர்க்கட்சியினரை வன்மையாகக் கண்டிக்கிறோம்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

என்னதான் ‘ஒல்லியான ஆளா’ இருந்தாலும், அவர் ஏதாவது கலாட்டா செஞ்சா அவரைக் ‘குண்டுகட்டா’ தூக்கிட்டுப் போய்த்தான் வெளில விட்டாகணும்.
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

‘‘பிச்சைக்காரன் வேஷம் போட்டு நகர்வலம் போனது நல்லதாப் போச்சு அமைச்சரே...’’
‘‘என்ன ஆச்சு மன்னா..?’’
‘‘ரொம்ப நாளைக்குப் பிறகு நல்ல சாப்பாடு சாப்பிட்டேன்!’’
- சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்.

‘‘தலைவரை உள்ளே தள்ளியே தீரணும்னு கங்கணம் கட்டிட்டுத் திரியறாங்க...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் தலைவர் கைதாக வாய்ப்புள்ளதுன்னு வானிலை அறிக்கைல கூட சொல்றாங்களே!’’
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.