சமுதாயத்தை சினிமா திருத்தாது!





‘விஸ்வரூபம்’ பார்த்த அத்தனை தமிழ் ரசிகர்களின் இதயத்திலும் கமலுக்கு இணையான சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் ராகுல் போஸ். தாலிபன் இயக்கத் தலைவன் உமராக அவர் காட்டியிருக்கும் வில்லத்தனம் தமிழ் சினிமாவுக்குப் புதுசு. ஆனால் ராகுல் போஸுக்கு அதுதான் இயல்பு. 20 ஆண்டுகளில் இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக பெயரெடுத்திருக்கும் ராகுல் போஸ், படங்களைத் தேர்ந்தெடுத்தே நடிக்கிறார். ‘‘ஒரு நடிகனின் சினிமா வாழ்க்கை அவன் நடிக்கும் படங்களை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. ‘முடியாது’ என நிராகரிக்கும் படங்களே அதை முடிவு செய்கின்றன’’ என்கிறார் அவர்.

*   கொல்கத்தாவில் பிறந்து மும்பையில் வாழும் போஸ், இந்திய அணிக்காக ரக்பி விளையாடியவர். நடிகரான பிறகும் விளையாடினார். ஆனால் வேண்டுமென்றே இவர்மீது மோதி காயப்படுத்துவதை மற்றவர்கள் வழக்கமாக்கிக் கொண்டதால், விளையாட்டை விட்டார்.

*   விளம்பர நிறுவனம் ஒன்றில் காப்பி ரைட்டராக வேலை பார்த்துக்கொண்டே நாடகங்களில் நடித்தார். அதனால் சினிமா வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் தயாரான முதல் முழுமையான ஆங்கிலப்படமான 'ணிஸீரீறீவீsலீ, கிuரீust' அவருக்கு சர்வதேசப் புகழைக் கொடுத்தது. பல விருதுகளும் வாங்கினார். ‘20tலீ சிமீஸீtuக்ஷீஹ் திஷீஜ்' நிறுவனம் வாங்கிய முதல் இந்தியப் படம் அது. இன்னமும் ஹிங்கிலீஷ் படங்கள் எனப்படும் இந்திய ஆங்கிலப் படங்களின் சூப்பர்ஸ்டார் அவர்தான்!

*   ‘‘பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நான் எதையும் செய்வதில்லை’’ என்பார் அவர். ராகுல் போஸ் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அது நல்ல படமாகவே இருக்கும். மல்லிகா ஷெராவத்துடன் அவர் இணைந்து நடித்த ‘மான் கயே முகல்-இ-ஆஸம்’ படத்தைத் தவிர, ‘‘நான் நடித்த அத்தனையும் நல்ல படங்கள்.

நல்லவேளையா அந்த மோசமான படத்தை பலரும் பார்க்கலை’’ என சிரிக்கிறார்.
*   ராகுல் போஸ் ஒரு இயக்குனரும் கூட. அவர் இயக்கிய ‘ணிஸ்மீக்ஷீஹ்தீஷீபீஹ் ஷிணீஹ்s மி‘னீ திவீஸீமீ!’ என்ற ஆங்கிலப்படம் 2011ம் ஆண்டு வெளியானது. இப்போது 'விஷீtலீ ஷினீஷீளீமீ' என்ற தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார்.

*   எந்த மொழிப் படத்தில் நடித்தாலும், தன் சொந்தக் குரலில் பேசி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழே தெரியாத அவர் ‘விஸ்வரூபம்’ படத்திலும் தமிழ்க் குரலில் பேசினார். ‘‘படத்தை இந்தியிலும் தமிழிலும் எடுத்ததால், ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை எடுப்பார்கள். முதலில் இந்தி பேசி நடித்து விட்டு, ஷூட்டிங் பிரேக்கில் கமலிடம் வந்து தமிழ் உச்சரிப்பை கற்றுக்கொண்டு, அதே சீனில் திரும்ப நடிப்பேன். கிளிக்கு மொழி சொல்லித் தருவது போல கமல் சொல்லிக் கொடுத்தார்’’ என்கிறார். ஏற்கனவே ‘மிஸ்டர் அண்டு மிசஸ் ஐயர்’ படத்திலும் தமிழ் பேசும் கேரக்டரில் நடித்திருக்கிறார் போஸ்.

*   ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுக்கு இணையான பாத்திரம் என்பதால்தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். ‘‘மிகப்பெரிய நடிகரோடு நடிக்கிறோம் என்ற காரணத்துக்காக நான் எந்தப் படத்திலும் நடிப்பதில்லை. எனக்கு வேலை இருக்கிற படத்தில்தான் நடிக்கிறேன்’’ என்கிறார்.

*   ‘விஸ்வரூபம்’ ஷூட்டிங் முடிந்து, கமலோடு அவர் பேசி ஆறு மாதம் ஆகிறது. ‘‘இரண்டாவது பாகத்தில் நான் இருக்கிறேனா என்பது தெரியவில்லை. கமலைத்தான் கேட்க வேண்டும்’’ என நழுவுகிறார்.

*   வசூலைப் பற்றிக் கவலைப்படாத கலைப்படங்களில் அதிகம் நடிப்பவர் ராகுல் போஸ். ‘விஸ்வரூபம்’தான் அவர் நடித்து நூறு கோ*   ரூபாயைத் தாண்*   வசூல் செய்த வெற்றிப்படம். ‘‘ஆனால் அதில் ஒரே ஒரு பைசாவுக்குக்கூட நான் காரணமில்லை. அது கமலோட படம். எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்’’ என்கிறார்
அடக்கமாக!

*   நடிகர் என்பதைத் தாண்*   சமூக சேவகர் என்ற முகமும் அவருக்கு உண்டு. ‘தி ஃபவுண்டேஷன்’ என்ற அவரது அறக்கட்டளை, அனைத்துவிதமான சமூகப் பாகுபாடுகளையும் நீக்குவதற்குப் பாடுபடுகிறது. சுனாமி தாக்கியபோது அந்தமான் நிக்கோபர் தீவு மக்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டவர். பொழுதுபோக்கு ஊடகங்கள் மூலமாக கல்வியைப் பரப்புவது பற்றி உலக வங்கியில் பேசியிருக்கிறார். உலக வங்கியில் உரையாற்றிய, பிசினஸ் துறையைச் சாராத ஒரே இந்தியர் அவர்தான்! ‘‘உங்கள் மூளை சொல்வதைக் கேட்காதீர்கள். மனம் சொல்வதைக் கேளுங்கள். சேவை எண்ணம் தானாக வரும்’’ என்பார்.

*   சமுதாயத்தை சினிமா மூலம் திருத்தவோ, சீரழிக்கவோ முடியாது என்கிறார் போஸ். ‘‘உணர்வுள்ள மக்களை மேலும் உணர்வுள்ளவர்களாக மாற்றும் ஒரே ஒரு வேலையைத்தான் சினிமா செய்யும்’’ என்பது அவர் கருத்து.

*   நடிகர்களுக்கு மட்டுமில்லை... எல்லோருக்கும் அரசியல் வேண்டும் என்பது அவர் வலியுறுத்தும் விஷயம். ‘‘நாம் உடுத்தும் உடை, சாப்பிடும் உணவு, செய்யும் பயணம் என எல்லாவற்றையும் ஏதோ ஒரு அரசியல்தான் தீர்மானிக்கிறது. நமது வாழ்க்கையில் முக்கியமான இடத்தை வகிக்கும் அரசியலை கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்கிறார் போஸ்.
- அகஸ்டஸ்