ரசனை

‘‘என்னங்க... குழந்தைங்க எப்போ பார்த்தாலும் டி.வி,
கம்ப்யூட்டர் கேம்னு வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறாங்க. இயற்கையை
ரசிக்கிற மாதிரி அவங்களை எங்கயாவது கூட்டிட்டு போகணும். ஒரு வேன் ஏற்பாடு
பண்ணி... எங்கயாவது மலைப்பிரதேசமா போயிட்டு வருவோமா?’’ - மனைவி சுதா
சொன்னது மாதவனுக்கும் சரி என்றே பட்டது.
மறுநாள் உறவினர்களிடம் கலந்து
ஆலோசித்தான். எல்லா குடும்பங்களும் ஒன்றாகச் சேர்ந்து, கையைக் கடிக்காத
பட்ஜெட்டில் கொடைக்கானல் போக முடிவெடுத்தார்கள். சனி, ஞாயிறு லீவில் கிளம்ப
முடிவுசெய்து, ஒரு வாடகை வேனை ஏற்பாடு செய்தான். சனிக்கிழமை காலையில்
சாப்பாடு, ஸ்நாக்ஸ் வகையறாக்களுடன் வேனில் ஏறி அமர்ந்தனர். அவன் பிள்ளைகள்
இரண்டு, அவன் தங்கை பிள்ளைகள், தம்பி பிள்ளைகள் என்று எல்லோரும் கூட்டணி
சேர்ந்து அமர்க்களம் செய்தபடி பயணம் தொடர்ந்தது. வேன் மலை மீது ஏற
ஏற... ஆட்டம் பாட்டத்துடன் இயற்கைக் காட்சிகளை ரசிக்கத் தொடங்கினர்
குழந்தைகள். பத்து நிமிடம்தான் ஆகியிருக்கும்... குழந்தைகள் பசிப்பதாகச்
சொல்ல, வண்டியை ஓரமாக நிறுத்தி காலை உணவை முடித்தனர். சாப்பிட்டு வேனில்
ஏறிய குழந்தைகள் கோரஸாக டிரைவரை அழைத்தனர். ‘‘டிரைவர் அங்கிள்...
போரடிக்குது. வேன்லதான் டி.வி இருக்குல்ல... கார்த்தி படம் இருந்தா
போடுங்க... பார்த்துக்கிட்டே வர்றோம்!’’
|