வாசகர் கவிதைகள்



Untitled DocumentUntitled Document


பார்வை
வெட்கம் இல்லாமல் அவள் பின்னால் அலைகிறேன்... என்றாவது ஒருநாள் அவள் என்னை வெட்கத்தோடு பார்ப்பாள் என்று!
- சரவணன், தஞ்சாவூர்
அடி
எங்களைக் கண்டால் எப்போதும் உங்களுக்கு அடிக்க மட்டுமே தோன்றுகிறதே... இருக்கும்போதும், இறந்தபின்பும்!- விலங்கின் தோல்
- ஆர்.தமிழ்ச்செல்வன், வேதாரண்யம்.
யார் கடவுள்
கோயிலில் சாமி கும்பிட்டு வெளியில் வந்தவனை கையெடுத்து கும்பிட்டான் பிச்சைக்காரன்!
- எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி.
வகுப்பு
கோயிலில் சாமி கும்பிட்டு வெளியில் வந்தவனை கையெடுத்து கும்பிட்டான் பிச்சைக்காரன்!
- வைகை.ஆறுமுகம், வழுதூர்.
கருணை
தின்று பிழைத்துப் போ என்ற பெருந்தன்மையைத் தவிர கொஞ்சமும் கோபமில்லை வெட்டித் தனியே வைக்கப்பட்டிருந்த ஆட்டுத் தலையின் விரிந்த கண்களில்!
- தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்.
காணாமல் போனவர்கள்
கிராமம் நகரம் எங்கும் தொலைந்துகொண்டிருக்கிறார்கள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்லும் பாட்டிகள்!
- பெ.பாண்டியன், காரைக்குடி.
உறுத்தல்
புது மெத்தை உறங்க விடவில்லை அதன் விலை!
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.