சொல்லு லொள்ளு தில்லு



‘‘பீகாரில் வளர்ச்சித் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். முதலில் அவர் ஏதாவது ஒரு மாநில முதல்வராக பொறுப்பு ஏற்கட்டும். மாநிலத்தின் நிர்வாகப்பணி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். அதற்குப்பின் அவர் பிரதமர் பதவிக்கு ஆசைப்படட்டும்!’’

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 


‘‘பெரிய தலைவர்களை விமர்சனம் செய்தால்தான் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் தலைப்பிட்டு செய்திகள் வெளியிடுவார்கள் எனக் கருதி வீண் விமர்சனங்கள் செய்யக்கூடாது!’’

ராகுல் காந்தியை விமர்சனம் செய்பவர்களுக்கு ஆந்திர முதல்வர் ரோசய்யா அட்வைஸ்


‘‘அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் வருகிறது. அப்படி யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களின் கையை வெட்டுங்கள். அரசின் இந்தத் திட்டத்தில் லஞ்சம் குறுக்கிட்டால் நான் சகித்துக்கொள்ள மாட்டேன்.’’


பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

‘‘டைரக்டர்கள் நடிக்கலாமா என்று கேட்கிறார்கள். நடிப்பு சொல்லிக்கொடுப்பவர்கள் நடிப்பதில் தவறு இல்லை. ஆனால், எப்படிப்பட்ட வேடங்களில் நடிப்பது என்பதில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நமக்குத்தான் எல்லாம் தெரியுமே என்று நினைக்கக்கூடாது!’’

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்