நியூஸ் வே!



ல்லிகா ஷெராவத் விரும்பிப் படிப்பது ராமாயணம், மகாபாரதம் மற்றும் பக்திப்
புத்தகங்களைத்தான்!

ஷூட்டிங்குக்காக 21 நாட்கள் டெல்லியில் இருந்தார் காத்ரினா கைஃப். நாள்தவறாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு பார்சல் வந்துவிடும். பிரித்துப் பார்த்தால் உள்ளே ஃபிரஷ்ஷான ரோஜாக்கள் கொத்தாக இருக்கும். அனுப்பியவர் யார் என்று இருக்காது. ஒரு கட்டத்தில் இந்த ‘அனாமதேய’ விளையாட்டை பட யூனிட்டே ரசிக்க ஆரம்பித்துவிட்டது. ஷூட்டிங் முடிந்து ஊர் திரும்பினாலும், இன்னும் அந்த ரசிகர் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறார் காத்ரினா.



செலீனா ஜெட்லி உற்சாகத்தில் இருக்கிறார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவின் தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் அவர். கூடவே எகிப்தின் சுற்றுலாவை மேம்படுத்தும் தூதராகவும் இருக்குமாறு அவரைக் கேட்டிருக்கிறார்கள். ‘‘எகிப்து எனக்கு ரொம்ப பிடித்த நாடு. அடிக்கடி அங்க போகவும் சான்ஸ் கிடைச்சிருக்கு’’ என்கிறார் செலீனா உற்சாகமாக!


லப்பாகட்டி பிரியாணி தெரியும்... தல பிரியாணி? ஆமாம்... 'மங்காத்தா’ படக்குழுவினருக்கு தானே கைப்பட ஸ்பெஷல் பிரியாணி செய்து வந்து பரிமாறியிருக்கிறார் அஜித்!

யக்குனர் சங்க விழாவில் ‘எந்திரன்’ பாடல்களுக்கு ஆடிய சமீரா ரெட்டியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. மோதிரக்கையால் குட்டுப் பட்டது போல குஷியாகத் திரிகிறார் சமீரா.


பாலிவுட்டின் இந்த ஆண்டு காஸ்ட்லி கல்யாணம், அநேகமாக விவேக் ஓபராய் & பிரியங்கா ஆல்வா திருமணமாகத்தான் இருக்கும். பெங்களூருவில் நடைபெற்ற திருமணத்தில் பாலிவுட் மட்டுமில்லை; தென்னிந்திய திரையுலக பிரமுகர்களும் மிஸ்ஸிங்! (மும்பையில் நடந்த ரிசப்ஷனில் எல்லோரும் மொத்தமாய் வந்து கலக்கினார்கள்!) தருண் தஹிலியானி வடிவமைத்த பிரத்யேக காஸ்ட்யூமில் மணமக்கள் கலக்க, பஞ்சாபி மற்றும் கன்னட சம்பிரதாயங்கள் கலந்து நடந்தது கல்யாணம். மணமேடையை அலங்கரிக்க இத்தாலியிலிருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டன என்றால், மற்ற விஷயங்களை கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்!.