இதைப் படிச்சுட்டு அடுத்த பக்கத்துக்கு போங்க!



‘‘வீட்டில் அம்மா, அப்பா, மனைவி, தம்பி வெங்கட், அவருடைய குழந்தை... இதுதான் உலகம். எனக்கு சொந்த ஊர் மதுரை, பரவை. என் அம்மா நான் படிச்ச ஸ்கூலிலேயே டீச்சர் ஆக இருந்தாங்க.
அப்பா ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்திட்டு இருந்தார். இப்போ ரிடையர்ட் ஆகிட்டார். 1987ல் பிறந்து முழுமையா 90ஸ் வாழ்க்கை வாழ்ந்தவன். பாலிடெக்னிக்கில் படிச்சிட்டு தொடர்ந்து எம்ஐடியில் இன்ஜினியரிங் முடிச்சேன்.

ஒரு கம்பெனியில் வேலையில் இருந்தேன்.தனியார் சேனலில் குறும்பட போட்டி நடந்தப்ப அதுல கலந்துகிட்டேன். நடுவர்கள் பாராட்டினாங்க. அதைத் தொடர்ந்து படங்கள்.
இப்படிப் போன வாழ்க்கையில் சினிமா சேர்ந்துகொள்ள வேலையை விட்டுட்டு சினிமாவில் முழுமையா இறங்கினேன்.

 ‘பண்ணையாரும் பத்மினியும்’ முதல் படமா என்னுடைய கரியரை துவக்கி வைச்சது. இதோ இப்ப...’’- இப்படி சொல்பவரின் சமீபத்திய படம் பெரும் வெற்றி பெற்று டிரெண்ட் செட்டராக மாறியுள்ளது. யார் இவர்..? பக்கத்தைப் புரட்டினால் தெரிந்துவிடும்!