சமையல் பிசினஸுக்கு வழிகாட்டி!
சமீபத்தில் இந்தியாவின் முன்னோடி நெய் தயாரிப்பு நிறுவனமான ‘ஆர்கேஜி’யும், தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கமும் இணைந்து, சமையல்கலைப் படிப்பில் இறுதிஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்காக, ‘ஸ்டெப்பிங்ஸ்டோன்’ எனும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்வைச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது.  இதில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை என தமிழ்நாடு முழுவதும் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த, 1,500 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றிருக்கின்றனர்.
சமையல் சார்ந்து என்ன மாதிரி பிசினஸ் செய்யலாம், எங்கெல்லாம் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று சமையல் துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றனர்.
தங்களின் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அறிந்துகொள்ள இந்நிகழ்வு உதவிகரமாக இருந்ததாக மாணவர்கள் ஒருமித்த குரலில் சொல்கின்றனர். சமையல்துறை சார்ந்த மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் மையமாக ‘ஸ்டெப்பிங்ஸ்டோன்’ நிகழ்வு இருந்தது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
|