Bed கார்!



படுக்கையிலிருந்து எழுந்திரிக்காமலேயே பயணம் செய்வதைக் கனவு கண்டிருப்போம். இந்தக் கனவை உண்மையாக்கியிருக்கிறார் ஓர் இளைஞர். ஆம்; மரத்தினால் நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டில், பஞ்சு மெத்தை, தலையணை என படுக்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, பெட் கார் என்ற புதுவிதமான வாகனத்தை வடிவமைத்திருக்கிறார் அந்த இளைஞர்.

கடந்த வாரம் மேற்கு வங்காள சாலைகளை வலம் வந்திருக்கிறது அந்த பெட் கார். சாலைகளில் சென்ற அனைவரும் ஒரு நொடியாவது நின்று, பெட் காரைப் பார்த்துவிட்டு, தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். மெத்தையில் தலை வைக்கும் இடத்தில் டிரைவருக்கான இருக்கை உள்ளது.

அங்கிருந்து பெட் காரை இயக்குகிறார். கால் வைக்கும் இடத்தில் இரு பக்கமும் கண்ணாடியைப் பொருத்தியிருக்கிறார். இது பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க உதவுகிறது. பெட் காரை ஓட்டிக்கொண்டே, இடையில் எழுந்து நின்று ஷாருக்கான் போல போஸ் கொடுக்கிறார் அந்த இளைஞர். இந்த விநோத பெட் காரை வீடியோவாக்கி, இன்ஸ்டாகிராமில் தட்டிவிட, 6 கோடிப்பேர் பார்த்துவிட்டனர்.

த.சக்திவேல்