அஜித்தை இயக்குகிறார் தனுஷ்?
ஆம். அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கப்போகிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. விரைவில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிகின்றன.இதற்கு முன்பு ‘ப.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படங்ளை தனுஷ் இயக்கியுள்ளார்.  ‘இட்லிக்கடை,’ படப்பிடிப்பில் இருக்கிறது.தவிர இந்திப் படத்தில் நடித்து வருகிறார். ‘குபேரா’ போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது. தவிர ‘இளையராஜா’ பயோபிக்கும், பெயரிடப்படாத இரு படங்களும் அவர் கைவசம் உள்ளன.இந்நிலையில்தான் இப்படியொரு செய்தி இறக்கை கட்டிப் பறக்கிறது.
அடுத்த மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ வெளியாகிறது. இதன்பிறகு எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது மர்மமாகவே இருக்கிறது. ‘விஸ்வாசம் சிவா’, விஷ்ணுவர்த்தன், ஆதிக் ரவிச்சந்திரன் என பலரும் ரேஸில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் பெயடரும் டைரக்டராக அடிபடுகிறது. ஒருவேளை இந்த ப்ராஜெக்ட் டேக் ஆஃப் ஆனால், பெரும் பட்ஜெட் படமாகவும் ஹை வோல்டேஜ் மாஸ் படமாகவும் அமையும் என திரையுலகம் கிசுகிசுக்கிறது.எதுவும் நடக்கலாம். இது நடந்தால் நன்றாக இருக்கும்! காம்ஸ் பாப்பா
|