விஜய் செம கூல் & சில் மேன்!
‘லக்கி சார்ம்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் பூஜா ஹெக்டே. ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து இதோ இப்பொழுது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் - தற்காலிகமாக ‘விஜய் 69’ - இவர்தான் ஹீரோயின். ‘‘லக்கி சார்ம்... இந்தப் பெயர் கிடைக்க நிறைய கஷ்டப்பட்டேன். ஒரு காலத்திலே நானும் ஏராளமான தோல்வியை சந்திச்ச நபர்தான். ஆனால், என்னுடைய நேரத்தை நான் மக்களை சந்தோஷப்படுத்த யூஸ் பண்றேன்னு சிந்திக்கும் போதே என்னுடைய கஷ்டம், ஹார்ட் ஒர்க் எல்லாமே காணாம போயிடும்.
நிறைய கடினமான சூழல்கள சந்திச்சிருக்கேன். யாரோ ஒருத்தர், எங்கையோ ஒரு மூலையிலே ‘ஆல வைகுண்டபுரம்’ படத்துல இடம்பெற்ற ‘புட்ட பொம்மா...’ பாடலைப் பார்த்தோ அல்லது ‘பீஸ்ட்’ தமிழ்ப் பட ‘அரபிக் குத்து...’ பாட்டுக்கு தாளம் போட்டோ சந்தோஷமா இருக்காங்கன்னா அதுதான் என்னுடைய வெற்றி.
கஷ்டப்பட்டு எந்த உதவியும் இல்லாம இந்த நிலைக்கு வந்திருக்கேன். அதனால நான் எப்போதும் வெற்றியை ஒரு பொருட்டாப் பார்த்ததே இல்லை. ஏராளமான தோல்விகள் கொடுத்த பக்குவம்தான் இப்போ எனக்குக் கிடைச்சிருக்கற இந்த ஸ்டேஜ்...’’ புன்னகைக்கிறார் பூஜா ஹெக்டே. டான்ஸிங் ஹீரோக்கள் கூடவே நடிக்கிறீங்களே... எப்படி உங்களை நீங்களே இந்த டான்ஸ் மோடுக்கு தயார் செய்துக்கறீங்க?
ஓ மை காட்! என் வாழ்க்கையிலேயே பெரிய டஃப் இதுதான். ஹ்ருதிக் ரோஷன் துவங்கி ராம் சரண், அக்ஷய் குமார், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், இப்போ விஜய் வரைக்கும் டான்ஸிங் ஹீரோக்கள்தான்.தேங்க் காட். நான் சின்ன வயசிலேயே கிளாசிக்கல் டான்ஸர். அதுதான் எனக்குக் கைகொடுக்குது. ஆனாலும் சில ஸ்டெப்ஸ்லாம் ஹையோ மோட்தான். ஆனா, அந்தப் பாட்டு மெகா ஹிட் ஆகும் போது பட்ட கஷ்டமெல்லாம் பறந்துடும்!
‘நம்பர்1 நடிகை’ என்கிற போட்டியில் நம்பிக்கை இருக்கா?
நிச்சயமா இல்லை. இந்த நம்பர் கேம் ஒரு மாயை. மக்கள் சாய்ஸ், மார்க்கெட் இதெல்லாம் மாறிட்டே இருக்கும். நல்ல நடிகை என்கிற பெயர்தான் நிலைக்கும். அதுதான் என்னுடைய டார்கெட். அதேபோல நம்பர் ஒன் நடிகை டேக்கை விட, இப்போ இருக்க இளம் பெண்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கதான் நான் முயற்சி செய்வேன். அதற்கான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கவும் நான் மெனக்கெடுவேன்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ‘விஜய் 69’?
அனேகமா ‘அரபிக் குத்து...’ பாட்டுக்காக தளபதி கூட டான்ஸ் ஆடி நான் வெயிட்டே கொஞ்சம் குறைஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். அவ்ளோ எனர்ஜி, ஃபன் பாடல். விஜய் டான்ஸ் ஆடும் போது பார்க்கணுமே செம கூல், சில் மேன். ‘அரபிக் குத்து...’க்கு சமமா அல்லது அதைவிட இன்னும் ஃபாஸ்ட்டா ஒரு பாட்டு ‘விஜய் 69’ல இருக்கு. அது மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடியும். மத்ததெல்லாம் பட ரிலீஸ் அப்ப சொல்றேன்!
காம்ஸ் பாப்பா
|