Yellow... Orange... Red!
மழைக் காலங்களில் பொதுவாக சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கைகள் மக்களுக்கு விடுக்கப்படுகின்றன.
மஞ்சள் எச்சரிக்கை
ஒரு பகுதியில் தோராயமாக 6 செமீ முதல் 11 செமீ வரை மழை பெய்யக்கூடிய நிலை இருந்தால், அப்பகுதிக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கிறது.
ஆரஞ்சு எச்சரிக்கை
ஒரு பகுதியில் ஒரே நாளில் 11 செமீ முதல் 20 செமீ வரை மழை பெய்யக்கூடிய சூழல் இருந்தால் அப்பகுதிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுக்கிறது. இதன்மூலம் அந்த இடத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகள், ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய கடுமையான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது.
சிவப்பு எச்சரிக்கை
மழை தீவிரமடையும் காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்தால் விடுக்கப்படும் உச்சகட்ட எச்சரிக்கை ரெட் அலர்ட் ஆகும். ஓர் இடத்தில் ஒரே நாளில் 20 செமீ அளவுக்கு மேல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுக்கிறது. இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
|