96



*நயன்தாரா... பெயரைக் கேட்டாலே தமிழக இளசுகள் சற்று தடுமாறுவார்கள். என்னதான் லேடி சூப்பர் ஸ்டார் என்றாலும் அவருக்குள் மிகப்பெரிய குழந்தைத் தனம் இருப்பதாக ஒருமுறை லைவ் சாட்டில் விக்னேஷ் சிவன் காதல் மலர பகிர்ந்தார்.

*ஷூட் இல்லை என்றால் உடனே சொந்த ஊருக்கு ஜூட் விடும் நயன்தாராவுக்கு ஹைதராபாத் பிரியாணி எனில் அகம் மலரும். மேலும் சைனீஸ் ரெஸ்டாரண்ட்கள் எனில் முதல் ஆளாக துண்டு போட்டுவிடுவார். சில நேரங்களில் மைண்ட் செட் பொருத்து வட இந்திய உணவுகளும் ரசித்து உண்பதுண்டு.

*எங்கே ஜாய்

ஸ்டிக் கிடைத்தாலும் மணிக்கணக்கில் கேம் விளையாடும் பக்கா கேமர் கேர்ள். சில மாதங்களுக்கு முன் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கேம் கோர்ட்டில் விளையாடிய வீடியோ வைரல் ஆனது யாவரும் அறிந்ததே.

*நயன்தாரா

வுக்கு கிளைவ் கிறிஸ்டியன் நம்பர்:1 (Clive Christian No. 1 Cologne) பெர்ஃபியூம் செம ஃபேவரைட். இதன்  விலை இந்திய மதிப்பில் ரூ. 36,766. சில நேரங்களில் போலோ ஸ்போர்ட் பெர்ஃபியூம் பயன்படுத்துவதும் உண்டு. இதன் விலை ரூ.3000ல் துவங்கி ரூ. 10,000 வரை தரம் பொருத்து மாறும்.

*‘2003 பெஸ்ட் கேரளா மாடல்’ என்னும் பட்டம் பெற்ற நயன்தாராவுக்கு எந்த உடையானாலும் அது கருப்பு நிறம் எனில் முகம் சட்டென பிரகாசமாகும். பண்டிகை என்றால் குடும்பத்துடன் இருக்கவே விரும்புவார் லேடி சூப்பர் ஸ்டார்.

*பிடித்த நடிகர் யார் எனக் கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் அஜித் என பொட்டில் அடித்தார் போல சொன்ன நயன்தாராவுக்கு அஜித் ஃபேன்ஸ் இப்போதும் ஹார்ட்டின் போட்டு அம்பு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

காம்ஸ் பாப்பா