உலகின் முதல் மிஸ் AI



சமீபத்தில் உலகிலேயே முதல்முறையாக கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட ஏஐ மாடல்களுக்கான விர்ச்சுவல் உலக அழகிப்போட்டி நடந்தது. இந்த அழகிப்போட்டியில் 1,500க்கும் மேற்பட்ட ஏஐ அழகிகள் கலந்துகொண்டனர். இவர்களில் பத்து பேரைத் தேர்வு செய்து, இறுதிப்போட்டி நடந்தது. இதில் கென்சா லாய்லி என்பவர் உலகின் முதல் மிஸ் ஏஐ ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஏஐ பிரபலமாக இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறார் கென்சா. இவரை இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். டிக் டாக்கிலும் 45 ஆயிரம் பேர் கென்சாவைப் பின் தொடர்கின்றனர். கென்சாவை உருவாக்கிய மெரியம் பெஸா என்பவருக்கு 20 ஆயிரம் டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

அதாவது இந்திய மதிப்பில் 16.70 லட்ச ரூபாய். மனிதர்களுக்கு நடக்கும் அழகிப் போட்டிகளைப் போலவே பல்வேறு பிரிவுகளில் ஏஐ மாடல்களுக்கும் நடக்கும் என்று இந்தப் போட்டியை நடத்தியவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

த.சக்திவேல்