விபீஷணனாக விஜய் சேதுபதி?
எஸ். அப்படித்தான் பேச்சு அடிபடுகிறது. இந்தி வெப்சீரீஸ் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க... அது நன்றாக இருப்பதாக பெயர் கிடைக்க... அட்லீ இவரை பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு வில்லனாக அறிமுகப்படுத்த... இன்று பாலிவுட் நடிகராகி விட்டார் வி சே.என்றாலும் வந்த வாய்ப்புகளை எல்லாம் எடுத்துக் கொள்ளாமல், நிதானம் காட்டுகிறாராம்.  இதன் மூலம் பாலிவுட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தபடியே மற்ற மொழிப் படங்களில் நடிக்கவேண்டுமென விஜய் சேதுபதி திட்டமிட்டு இருக்கிறாராம்.
அந்தவகையில் இப்போது ‘டங்கல்’ படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி டைரக்ட் செய்யும் ‘ராமாயணம்’ படத்தில் விபீஷணனாக நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமானாகவும் நடிக்க இருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஏப்ரலில் இப்பட ஷூட்டிங் தொடங்க இருப்பதால், மிக விரைவிலேயே விஜய் சேதுபதி இப்படத்தில் இணைவார் என்றும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட்டில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
காம்ஸ் பாப்பா
|