ஹைதராபாத்தில் ‘வேட்டையன்’!
‘தமிழக வெற்றி கழகம்’ தொடங்கிய விஜய்க்கு வாழ்த்துகள் சொன்ன வேகத்தில் ஃப்ளைட்டில் ஏறிய ரஜினி இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். காரணம்,
‘வேட்டையன்’ ஷூட்டிங்.  தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இதுவரை நடந்த ஷூட்டிங்கில், பஹத் ஃபாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டார்கள். இவை படத்தின் முக்கியமான காட்சிகள் என்கிறார்கள்.
இப்போது ஹைதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங், குறைந்தபட்சம் இரண்டு வாரம் வரை நீடிக்குமாம். இங்கு சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட இருக்கிறதாம். இவை தவிர ரஜினியின் காட்சிகள், அதாவது அவரது காவல்துறை பணி சம்பந்தமான காட்சிகள் இங்கு எடுக்கப்பட இருக்கிறதாம்.இந்த ஷெட்யூல் முடிந்துவிட்டால் மார்ச் மாத இறுதியில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
காரணம், ஏப்ரல் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.‘வேட்டைய’னில் துஷாரா, ரித்திகா சிங் இருந்தாலும் இவர்கள் யாரும் ரஜினிக்கு ஜோடி இல்லை.என்கவுண்டரைப் பற்றிய விரிவான தகவல்களுடன் இப்படம் இருக்கும் என்கிறார்கள்.
காம்ஸ் பாப்பா
|