விஜய் கடைசிப் படம்?



விஜய், தமிழக வெற்றி[க்] கழகம் கட்சியை தொடங்கியிருப்பதன் வழியாக அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டார்.தற்போது நடிக்கும் கோட் (GOAT - The Greatest of all Time), அடுத்து ஒரு படம் அவ்வளவுதான். 
அதற்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு. முழுக்கவனமும் அரசியலில்தான்... என விஜய் தனது அறிக்கையில் கூறியதில் இருந்து, அவரது கடைசிப் படம் பற்றிய யூகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

‘கோட்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்க இருப்பது, ஆஸ்கரில் விருது வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தயாரிப்பாளர்தானாம்.‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர் என அனைவரையும் பற்றி எல்லோருக்கும் தெரியும். 

ஆனால், அதன் தயாரிப்பாளரைப் பற்றி பலருக்குத் தெரியாது. பல கோடி கொட்டி படமெடுத்தாலும், ஏனோ அவரது பெயரோ அவரது நிறுவனத்தின் நாமகரணமோ ஆந்திராவைக் கடந்து மற்ற மாநில - தேசங்களுக்கு தெரியாமலேயே போய்விட்டது.

அந்த தயாரிப்பாளரின் பெயர் டிவிவி தனய்யா.இப்போது இவர்தான் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய்69’ படத்தின் தயாரிப்பாளர் என்ற ஒரு தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.விஜய் நடித்த ‘வாரிசு’ மூலம் அதன் தயாரிப்பாளர் தில் ராஜு பெரும் லாபம் சம்பாதித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதே விஜய்யை வைத்து படமெடுக்க டிவிவி தனய்யா தயாராக இருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை அநேகமாக முடிந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள்பான் இந்தியப் படமாகவும் எடுக்க திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள். இந்த இயக்குநர்கள் பட்டியலில் ஹெச்.வினோத் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் பெயர்களும் அடிபடுகின்றன.

காம்ஸ் பாப்பா