சந்தில் சிந்து பாடிய ராஷ்மிகா!



ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என்று கூகுள் தூக்கிவைத்து கொண்டாடினாலும், ‘புஷ்பா’ படத்திற்குப் பிறகு அவருக்கு ஹிட் எதுவும் அமையவில்லை.
இதனால் சரியான வாய்ப்புகளுக்காக தனது மானேஜரை பெரிய இயக்குநர்கள், ஹீரோக்கள் பக்கம் தூதுவிட்டிருந்தார். அப்போது சிக்கியதுதான் தனுஷ் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத டி51 படம்.

தனுஷ் படத்தை சேகர் கமுலா இயக்குகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநர்.தனுஷ் படம் என்பதால், தானாகவே வலிய வந்து ராஷ்மிகா வாய்ப்பை பெற்றிருக்கிறார். தனுஷும் ராஷ்மிகாதான் வேண்டுமென கூறியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.இதைப் புரிந்து கொண்ட ராஷ்மிகா பட்டென்று தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். ஹீரோவே சிபாரிசு செய்திருப்பதால் வேறு வழியில்லாமல் ராஷ்மிகா கேட்ட சம்பளத்தைக் கொடுத்து அவரை கமிட் செய்திருக்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா