சுருளி
‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் சமீபத்திய படைப்பான ‘சுருளி’, ‘சோனி லிவ்’வில் வெளியாகி அதிர்வுகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
கான்ஸ்டபிள் சாஜிவனும், அவருடைய உயர் அதிகாரியான ஆண்டனியும் ஜோய் என்ற குற்றவாளியைப் பிடிப்பதற்காக சுருளி என்ற மலைக்கிராமத்துக்கு மப்டியில் செல்கின்றனர்.
கூலி வேலைக்கு வந்திருப்பதாக அந்தக் கிராமத்தில் உள்ளவர்களிடம் சொல்கின்றனர். மது அருந்தும் வசதிகொண்ட ஒரு சிறிய மெஸ்ஸில் வேலைக்குச் சேர்கின்றனர். சுற்றியிருக்கும் மக்கள் ஆண்டனியையும், சாஜிவனையும் ஏளனமாக அணுகுகின்றனர். அந்த ஊரில் ஒருவருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. தவிர, இரவு நேரங்களில் காட்டுக்குள் விநோதமான நிகழ்வுகள் அரங்கேறுகிறது. பயத்தில் திக்குமுக்காடிப் போகிறார் சாஜிவன். குற்றவாளியைப் பிடிக்க இரண்டு காவல்துறையினரும் ஒரு மாய உலகுக்குள் மாட்டிக்கொள்கின்றனர். அந்த மாய உலகிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? குற்றவாளியைப் பிடித்தார்களா? என்பதே அமானுஷ்ய திரைக்கதை. ஓர் அடர்ந்த காட்டுக்குள்ளும், மாய உலகிலும் வாழ்ந்த ஒரு அனுபவத்தை தருகிறது இந்த மலையாள சினிமா. ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், வினய் போர்ட் என நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பு வழக்கம்போல மிளிர்கிறது. ஒளிப்பதிவும், சவுண்ட் டிசைனும் ஆசம்.
|