Data Corner!



*ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க வருகின்றனர்.

*ஒரு பென்சிலை வைத்து சராசரியாக 45 ஆயிரம் எழுத்துகளை எழுத முடியும். அல்லது 35 மைல் நீளத்துக்கு கோடுபோட முடியும்.

*30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6.50 கோடிப் பேர் முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 1 கோடிப் பேர் உயிரிழந்தனர்.

*80  சதவீத சுனாமிகள், பசுபிக் பெருங்கடல் பகுதியிலேயே ஏற்படுகின்றன.

*இந்தியாவில் உள்ள 100 தொழில்முனைவோர்களில் ஏழு பேர்  மட்டுமே பெண்கள், அவர்களில் பாதிப் (49.9%) பேர் லட்சியத்தைவிட விரும்பாத வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள்
என்று, ஐ.டபிள்யூ.டபிள்யூ.ஏ.ஜி-யின் நவம்பர் 2020 அறிக்கை கூறுகிறது.

*சோளம், கோதுமை, அரிசி ஆகியவற்றுக்கு அடுத்ததாக உருளைக்கிழங்கு உலகில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

*இந்தியாவில் மெதுவாக ஓடும் ரயில், நீலகிரி மலை ரயிலாகும். இது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

*உலகில் வெட்டப்படும் மரங்களில் 42% மரங்கள், காகிதங்களைத் தயாரிப்பதற்காக வெட்டப்படுகின்றன.

சுடர்க்கொடி