விஜய் 65 ஜார்ஜியா அப்டேட் exclusive



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் ஆக்‌ஷனில் ‘டாக்டர்’ நெல்சனின் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘விஜய் 65’. இதன் பூஜை சென்ற மார்ச் மாத கடைசியில் சன் ஸ்டூடியோவில் கிராண்ட் செலிபிரேஷனாக நடந்தது. பூஜையை முடித்த கையோடு, யூனிட்டும் ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவிற்கு பறந்தது.

‘மாஸ்டர்’க்குப் பிறகு விஜய்யின் லுக், தாறுமாறு ஸ்மார்ட் ஆனதில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறுகிறது. படத்தின் சுவாரஸ்யங்களைப்பற்றி கோலிவுட்டில் விசாரித்தால் அள்ளுகிறது ஆச்சரியங்கள்.

* இயக்குநர் நெல்சன் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ டைமிலேயே விஜய்யிடம் இந்த படத்திற்கான லைனை சொல்லியிருக்கிறார். ஹேப்பியான தளபதி, ‘‘டாக்டரை’ முடிச்சிட்டு வாங்க... நானும் ‘மாஸ்டரை’ முடிச்சிடுவேன். உடனே புராஜெக்ட்டை ஆரம்பிச்சிடலாம்...’ என சொல்லவும் குஷியான நெல்சன், ஒரே மூச்சில் ரெடி பண்ணின ஸ்கிரிப்ட்தான் இது.

*  முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் 17 நாட்கள் நடக்கிறது. விஜய் - ஹீரோயின் பூஜா ஹெக்டே தொடர்பான காட்சிகள் அங்கே ஷூட் செய்யப்படுகின்றன.

பூஜா அறிமுகமானது கோலிவுட் என்றாலும் இப்போது அவர் ரேஞ்சே வேறு. தெலுங்கின் டாப் ஹீரோயினாக சிலுசிலுக்கிறார். ‘ஆலவைகுந்தபுரம்லு’
ஹிட்டுக்குப் பின் அவரை தமிழ் ரசிகர்களும் கொண்டாடுகின்றனர். அதனாலேயே இந்தப் படத்திற்குள் வந்தார்.

யூனிட் ஜார்ஜியா கிளம்பும் அன்று பூஜா, சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படப்பிடிப்பில் இருந்தார். அதனால் அவரால் அன்று யூனிட்டோடு சேர்ந்து கிளம்ப முடியாமல் போனதாம். ‘ஆச்சார்யா’வில் தன் போர்ஷன்கள் முழுவதும் முடித்துக் கொடுத்துவிட்ட பின், மறுநாள் மும்பை வந்து ஜார்ஜியா ஃபிளை ட்டை பிடித்திருக்கிறார் பூஜா.

* ஜார்ஜியாவில் சில ஆக்‌ஷன் போர்ஷன்களும், ஒரு பாடலும் ஷூட் செய்யப்படுகின்றன. அதற்கான பாடலை அனிருத் கம்போஸ் செய்து கொடுத்து அனுப்பிவிட்டார். ‘ஆலவைகுந்தபுரம்லு’வின் மாஸ் ஹிட் பாடலான ‘புட்டபொம்மா’விற்கு நடனம் அமைத்துக் கொடுத்த ஜானி மாஸ்டர், முதல் முறையாக விஜய்யுடன் இணைகிறார்.

* ஆக்‌ஷன் + காமெடி ஜானரான இதில் விஜய் - பூஜா தவிர விஜய்யின் நண்பராக யோகிபாபு வருகிறாராம். ‘கோலமாவு கோகிலா’வுக்குப் பிறகு
நெல்சனின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட்கள் லிஸ்ட்டில் இப்போது யோகியும் இருப்பதால், செம ஃபீலாகிறார்.

‘டாக்டரி’ல் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்த கவின், இதில் மெயின் ரோலில் நடிக்கிறார். விடிவி கணேஷ், மலையாள நடிகை அபர்ணா தாஸ், ஷாஜி, ஆர்ட் டைரக்டர் கிரண் என பலரும் நடிக்கிறார்கள். பிரமாண்டமான ‘கே.ஜி.எஃப்.’ மற்றும் அதன் பார்ட் 2 படங்களின் ஃபைட் மாஸ்டர்களான அன்பறிவ், ஆக்‌ஷன்களை கவனிக்கிறார்கள்.

*ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா. நெல்சனுடன் முதன்முறையாக இணைகிறார். ஆனால், விஜய்யுடன் அவருக்கு இது இரண்டாவது படம். ஷங்கரின் ‘நண்பனி’ல் மனோஜ்தான் கேமராமேன். ஸோ, ‘நண்பனை’ விடவும் கலர்ஃபுல்லான விஷுவல் ட்ரீட் காத்திருக்கிறது.

* படத்தின் வில்லனாக பலரும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். ‘பேட்ட’ நவாசுதீன் சித்திக், ‘துப்பாக்கி’ வித்யுத் ஜம்வால் ஆகியோரின் பெயர்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன.

செகண்ட் ஹீரோயினான அபர்ணா தாஸ், மலையாளத்தில் பஹத் பாசிலுடன் ‘நிஜன் பிரகாஷன்’ மற்றும் ‘மனோகரம்’ படங்களில் நடித்தவர். ‘‘கேரளாவே கொண்டாடும் விஜய் சார் படத்துல இவ்ளோ சீக்கிரத்துல நானும் நடிப்பேன்னு எதிர்பார்க்கல. ஒரு பெரிய படத்துல நானும் இருக்கேன்றது சந்தோஷம். Blessed is the word...’’ என நெகிழ்கிறார் அபர்ணா தாஸ்.

மை.பாரதிராஜா