வலைப்பேச்சு



@balebalu - ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?
பின்ன என்ன? ‘தடுப்பூசி  திருவிழா’ன்னு சொல்லுறாங்களே... ஊசி போட்டா பலூன், ஜவ்வு மிட்டாய்லாம் கொடுப்பாங்களான்னு கேக்குறாம்பா!

@nchokkan - ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா’க் குச்  சற்றும் குறைவில்லாத எமோஷன், ‘என் மேனேஜர் லீவ்ல இருக்கார்!’

@shivaas_twitz - கேப்டன்சியும் பண்ணணும், கீப்பிங்கும் பண்ணணும், மேட்ச் முடிஞ்சதும் எதிர் டீமுக்கு டிப்ஸும் குடுக்கணும். இதுல பேட்டிங்கும் பண்ணணும்னா எப்படி சார்?

@chithradevi_91 - சின்ன வயசிலேயே பெத்தவக ‘பொய் பேசுவியா... பொய் பேசுவியா’னு பச்ச மட்டைய வச்சு உரிச்சி விட்ருந்தாங்கன்னா இன்னிக்கு தமிழ்நாட்டுல ஒரு முட்டாக் கூட்டம் உருவாகாம தப்பிச்சிருந்திருக்கும்.

@smbsultan - ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சுப் பேசினா உடனே காதலர்களாத்தான் இருக்கணுமா டாக்டர்?
அதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயமா கணவன் மனைவியா இருக்க முடியாது. அது உறுதி!

@deltatamilian - ‘உன்னையே யாரோ நினைக்கிறாங்கடா’ என எனக்கு விக்கல் எடுக்கும் போதெல்லாம் அம்மா சொல்லும். ஆனால், ஏனோ அம்மாவின் மறைவிற்குப் பிறகு விக்கலே வருவதில்லை...

@Kozhiyaar - ஒரு நண்பனின் மனைவி ஊருக்குச் சென்றுவிட்டால், மற்ற நண்பர்கள் அலுவலகத்தில் ‘Night Duty’ என்று தம் வீட்டில் பொய் சொல்கின்றனர்!

@ItsJokker - ஏது... இனிமே பேசுனா இறையாண்மைக்கு எதிரானதுன்னு கேஸ் போடுவாங்களா?!

@manipmp - PULL / PUSHக்கு அப்புறம் அதிக வித்தியாசம் தெரியாதது நிபுணர் குழுவுக்கும், வல்லுநர் குழுவுக்கும்தான்.

@shivaas_twitz - ஐபிஎல் சோறு போடாது, விவசாயம்தான் சோறு போடும்...அத உள்ள வையி குமாரு... நாம, playoff போக மாட்டோம்ங்கிற ஸ்டேஜ் வரும்போது யூஸ் பண்ணிக்கலாம்!

@saravananucfc - கரண்டி ரொம்ப வைட் என்பது கடையில் வாங்கும்போது தெரியாது. வீட்ல வாங்கும்போதுதான் தெரியும்..!

@RajaAnvar_ - ஐபிஎல் பார்க்க மனைவிகிட்டேருந்து ரிமோட்டை வாங்க வேட்பாளரை விட அதிகமா மெனக்கெட வேண்டியிருக்கு... துணி துவைச்சி, தோசை சுட்டுக் கொடுத்து...

@amuduarattai - ‘தண்ணி இல்லாத ஊருக்கு மாத்திருவேன்’ என்பதன் அப்டேட் வெர்சன்தான் ‘செல்போன் சிக்னல் இல்லாத ஊருக்கு மாத்திருவேன்’ என்பது.

@selvachnsg - யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்!

@Thaadikkaran - நைட் மேட்ச் பார்த்துட்டு ஒரு துளி சத்தமில்லாமல் வந்து தூங்கினா அம்மா கரெக்ட்டா கேப்பாங்க ‘மேட்ச்ல தோத்திருச்சா’ன்னு... அதை எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ!

@asdbharathi - app கூட அப்டேட் செய்தால்தான் வேலை செய்யும். மேம்படுத்திக் கொள்வோம் நம்மை நாமே, காலத்துக்கேற்ற வண்ணம்.

@naaraju - குத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா ‘குத்தி’டறதுதான...

@Ilango Krishnan - வாழ்த்தும்போது சிலர் ‘நீடு வாழ்க’ என்று வாழ்த்துகிறார்கள். ‘நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துவதே சரி என நினைக்கிறேன்.
‘நீடூழி’ என்பது ஏதோ கெட்ட வார்த்தை போல் தொனிக்கிறதென நினைக்கிறார்கள் போல... ஆனால், அது மிக அழகான சொல்.
ஊழி என்பது, பல்லாயிரம் ஆண்டுகள் சேர்ந்தால் ஒரு யுகம். பல யுகங்கள் சேர்ந்தால் ஓர் ஊழி. இப்படி பல ஊழிகள் கண்டு நெடுங்காலம் வாழ்க என்பதையே ‘நீடூழி வாழ்க’ என்றார்கள். அதாவது நீண்ட ஊழிகள் வாழ்க என்பதே அது.

‘நீடு வாழ்க’ என்பதில் காலப் பொருண்மை இல்லை. அது வெறுமனே நீண்டு வாழ்க என்றாகிறது. எனவே, நீடூழி வாழ்க என்றே வாழ்த்துவோம். ஊழி என்பது தமிழ்ச் சொல்லா என்று சிலருக்கு சந்தேகம். அது அசலான தனித் தமிழ்ச் சொல்லேதான். ஊழ் என்ற ஆசிவகக் கோட்பாட்டின் அளவைவாதத்தில் இருந்து வருகிறது ஊழி.

அப்புறம், ஊழ் என்பதும் விதி என்பதும் ஒன்றல்ல. ஊழ், விதியை விட நடைமுறையானது. இதைச் செய்தால் இது நடக்கும் என செயல், விளைவு, எதிர் விளைவைப் பேசுவது ஊழ். எது செய்தாலும் நடப்பதுதான் நடக்கும் என்பது விதிக் கோட்பாடு. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
ஒரு மானுட வாழ்வு பல ஊழ்கள் சேர்ந்தது. பலப் பல ஊழ்கள் சேர்ந்ததே ஓர் ஊழி. ஒரு பெருங்காலத்தின் முடிவு.

@Varavanaisen - இப்ப வரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தது திமுகன்னு பொய்யைப் பரப்பிகிட்டு இருக்கான் - ஒவ்வொரு இடமா திமுககாரன் போய் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கான். அந்த அச்சத்தில்தான் இயக்குநர் மாரி செல்வராஜின் செயலைக் கண்டிப்பது. இது எதோ மிரட்டல் கிரட்டல்னு மடை மாத்துறாங்க.

@FareethS - சொல்லுடா, DMK வருமா, ADMK வருமா..?
ரெண்டுமே வரணும்.
ரெண்டுமேவா..? எப்படி..?
2 May வரணும்னேன்..!

@raajaacs - ஒரு யானையை வரைய வனத்தின் வாஞ்சை தேவைப்படுகிறது.

@Kannan_Twitz - புன்னகைக்கும் கண்ணீருக்கும் இடைப்பட்டதுதான் காதல்!

@Janani_Twitz_ - பக்குவப்படுவது என்பது யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவது...

@sailaks11 - 20 வருடம் முன்னாடி (‘கர்ணன்’ படத்தில்1995ல் நடந்த நிகழ்வை 1997க்கு முன் என குறிப்பிட்ட
நிகழ்வு) நடந்த வரலாற்றுச் சம்பவத்தையே இவனுங்க இஷ்டத்துக்கு வளைக்கிறாங்கன்னா இவங்க கலைஞர் பற்றி 50 - 60 வருடங்களா எவ்வளவு பொய்யைக் கட்டமைச்சிருப்பானுங்க... இவர்களின் முதலீடே அந்த பொய்களை நம்புகிற முட்டாள் கூட்டம்தான்...

@Govi Lenin - மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இரவு - பகலாக காவல் காக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் அது மோடி அரசின் கைப்பாவையாகவே செயல்படு
கிறது என்பதை எதிர்க்கட்சியினர் அறிவார்கள்.

இயந்திரங்களை காவல் காக்கலாம். வேட்பாளர்களை யார் காவல் காப்பது? தமிழ்நாட்டுடன் சேர்ந்து தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஒன்று, அசாம். பா.ஜ.க ஆட்சியில் உள்ள இந்த மாநிலத்தில், வாக்கு இயந்திரத்தை மட்டுமல்ல, வேட்பாளர்களையும் பாதுகாக்கும் பணியில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக உள்ளன.

காங்கிரஸ், AIUDF ஆகியவற்றைச் சேர்ந்த 20 வேட்பாளர்கள் பாதுகாப்பாக ராஜஸ்தான் மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மிச்ச சொச்ச மாநிலங்களில் ராஜஸ்தானும் இருப்பதால் அங்கே சென்றிருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் பா.ஜ.க தன் வேலையைக் காட்டும் என்பதால், போடோலேண்டு மக்கள் முன்னணி தனது வேட்பாளர்களை இந்தியாவிலிருந்தே வெளியேற்றி, வேறு நாட்டில் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.

வாக்குப்பதிவுக்கு முன்பாகவே இந்த முன்னணியின் வேட்பாளர் ஒருவரைக் களவாடிச் சென்றுவிட்டது ஆளுங்கட்சியான பா.ஜ.க. அதனால்தான் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை, மிச்சமுள்ள வேட்பாளர்களை நாடு கடத்தி, காவல் காக்கிறது போடோலேண்டு மக்கள் முன்னணி. அநேகமாக, பூடான் நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்றும், இந்தியாவில் யாரும் இல்லை என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவின் ஜனநாயகத்தை, நாடு கடந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது பா.ஜ.க.

@Manaa Lakshmanan  - ‘காதலிக்க நேரமில்லை’, ‘பர்மா ராணி’, அண்ணாவின் ‘வேலைக்காரி’, ‘ஏழை
படும் பாடு’, ‘ஊட்டி வரை உறவு’, ‘தூக்குத் தூக்கி’, ‘மதுரை வீரன்’, ‘திருவிளையாடல்’ என டி.எஸ்.பாலையாவின் நடிப்பை விரிவாக வியக்க ஏராளமான படங்கள் இருக்கின்றன.

அவர் சிறந்த பாடகரும் கூட. ஆரம்ப காலத்தில் சில படங்களில் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது தெரிந்ததுதான். ஆனால், தெரியாத விஷயம், அவர் ஒரு படத்துக்கு கதை, வசனம் எழுதினார் என்பது!உத்ரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘ஸ்வீகாரம்’.

சிவாஜி, தங்கவேலு, எம்.கே.ராதா உட்பட பலர் நடித்தனர். நாராயண் இயக்கிய இந்தப் படத்தில் பாலையா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதோடு, இந்தப் படத்தின் கதை, வசனத்தையும் அவரே எழுதியிருந்தார். ஆனால், இந்தப் படம் வெளிவரவே இல்லை. வந்திருந்தால் நடிப்பில் மிரட்டிய டி.எஸ்.பாலையாவின் கதை, வசனத் திறமையையும் அறிந்திருக்க முடியும்.

@manuvirothi - பலான கட்சியாட்கள் மொத்தப்பேரும் இப்படித் தூங்கி னால் நாடு அமைதியாக இருக்கும் என்பதற்கான செயல்
விளக்கம்.

@akaasi - அந்தக் காலத்துல அம்பாசடர் கார் பானெட்ல ஒருசிலர் அலங்காரமாக ஒரு காத்தாடி மாட்டிருப்பாங்க. வண்டி வேகமாகப் போகப்போக அதுவும் வேகமா சுத்தும். இதோட ஒரு டைனமோ மாட்டி கரண்ட் எடுக்கலாமேன்னு பத்து வயசுப் பையனா யோசிப்பேன். நான் வளந்துட்டேன். ‘அதிபர்’ வளரவே இல்லை.