சிறைக்கு ரேட்டிங் போட்ட கைதி!



மும்பையைச் சேர்ந்த மன்சூரி ஆவேஷ், தான் செய்த குற்றத்துக்காக 5 மாதங்களுக்கு முன்பு மீரா பயாந்தர் பகுதியில் உள்ள நாயா நகர் காவல்நிலையத்திற்கு கைதியாகச் சென்றுள்ளார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ‘‘நாயா நகர் காவல் நிலைய சிறைகள் தூய்மையாக இருக்கின்றன. அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கனிவாக நடந்து கொண்டனர். கை விலங்கு மட்டும் இறுக்கமாக இருந்தது. வாய்ப்பிருந்தால் அந்த காவல்நிலையத்துக்கு மீண்டும் செல்ல ஆசை...’’ எனச் கூறி கூகுள் ரேட்டிங்கில் 5 ஸ்டார்களை ஆவேஷ் வழங்கியிருந்தார்.

இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் சிங், காவல்நிலையத்தை எப்படி மதிப்பிடுவீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.அவரின் இந்த டுவீட்டிற்கு ஒருவர், ‘கைதியின் கோரிக்கைப்படி கைவிலங்கு இறுக்கமாக இருப்பதை நிவர்த்தி செய்யவேண்டும்.

குற்றவாளிகளை நண்பர்களாக நடத்துங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்றொருவரோ, ‘கைதிகளின் நண்பர்களாக காவல்நிலையம் இருக்க வேண்டும். அங்கு பீட்சா, பர்கர் வழங்கப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்!

அன்னம் அரசு