நான் அஜித் ரசிகை! பிந்து மாதவி feeling proud



இன்னொசன்ட் ஏஞ்சல்... இனிக்கும் ஊஞ்சல் என கவிதையாக கலகலக்க வைக்கிறார் பிந்து மாதவி. கண்களால் கைது செய்யும் ‘கழுகு’ப் பெண். ஒரு சின்ன இடைவெளிக்குப் பின், மீண்டும் ஃபார்முக்குள் வந்திருக்கிறார். பொங்கல் ஸ்பெஷலாக புது போட்டோஷூட்டுடன் வரவேற்கிறார். இப்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘யாருக்கும் அஞ்சேல்’ என அடுத்த அதிரடி ஆட்டத்துக்கு பிந்து ரெடி!

அடிக்கடி காணாமல் போயிடுறீங்க?

நான் எங்கயும் போகல. இங்கதான் இருக்கேன். நான் இண்டஸ்ட்ரீக்கு வரும்போது இங்க யார் கான்டக்ட்டும் கிடையாது. மாடலிங்ல இருந்து ஸ்டிரைட்டா வந்துட்டேன். ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் நடிகையானேன். ஸ்கிரிப்ட் எப்படி செலக்ட் பண்ணணும், கதைகள் எப்படி ஜட்ஜ் பண்ணணும்னு எந்த ஐடியாவும் அப்ப கிடையாது. தெலுங்கில் ‘ஆவக்காய் பிரியாணி’யில் அறிமுகமானாலும், அங்க அடுத்தடுத்து படங்கள் கிடைச்சது. ஆனா, எதுவும் திருப்தியா இல்ல.

அந்த டைம்லதான் ‘கழுகு’ல பெரிய பிரேக் கிடைச்சது. என் இத்தனை வருஷ சினிமா அனுபவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் கத்துக்கறேன். ஆரம்பத்தில் ஒரு கதையை கேட்கும் போதே, ‘அட நல்லா இருக்கே’னு சொல்லி கமிட் பண்ணியிருக்கேன். ஒரு ஸ்கிரிப்ட் கேட்கும்போதே, இதை பண்ணலாமா... அது  ஒர்க் அவுட் ஆகுமானு முடிவு பண்ணவே சில வருஷங்களாச்சு. ‘நீங்க ஏன் அதிக படங்கள் பண்றதில்லை’னு எல்லாரும் கேட்கறாங்க. அப்படி கேட்கறது ஒரு வகையில சந்தோஷம்தான்.

பொதுவா இங்க ஒரு படம் ஹிட் ஆனா, அதே மாதிரி நடிக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருது. ஒரே மாதிரி ஸ்டீரியோடைப்பா நாமும் படங்கள் பண்ணினா, காணாமல் போயிடுவோம். ‘நீங்க ஏன் இடைவெளி விடுறீங்க? வர்ற படங்கள் எல்லாமே கமிட் பண்ணுங்க’னு என்கிட்டேயும் பலரும் சொல்றாங்க. எனக்கு பிடிச்சிருந்தாதானே நடிக்க முடியும்..?

ஒரு கதை கேட்கும்போதே அது வெற்றியடையும் அல்லது ஃப்ளாப் ஆகிடும் என்பதைத் தாண்டி, அந்த ஸ்கிரிப்ட்டை சைன் பண்ணும்போதே, நமக்குள் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் ஓடணும். இது நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும்னு மைண்ட்ல தோணுற ஸ்கிரிப்ட்டைத்தான் நான் செலக்ட் பண்ணி நடிச்சிருக்கேன்.

ஹெவி டாபிக்குக்குள்ள போயிட்டோம் போலிருக்கு... டாபிக் மாத்துவோம். உங்க ட்ரீம் ரோல் என்ன?

ஒரு நடிகையா எல்லாவித படங்களும், கேரக்டர்களும் பண்ண விருப்பம். சரித்திர, பூரண படங்கள் விரும்பிப் பார்ப்பேன். அதுவும் என்னோட கண்கள் பார்த்து, ‘நீங்க அம்மனாக நடிச்சா செம பொருத்தமா இருக்கும்’னு பாராட்டை அள்ளியும் வீசியிருக்காங்க. ஸோ, என் உடம்பெல்லாம் ஹெவியா நகைகள் போட்டு, விதவிதமான பட்டு சேலைகள் உடுத்தி அம்மன் ரோல்கள், அரசி, குயின் மாதிரி ஹெவி ரோல்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு.

நீங்க அஜித் ரசிகையாமே?

100 பர்சன்ட் கரெக்ட். ஐயெம் எ பிக் ஃபேன் ஆஃப் அஜித். சின்ன வயசில இருந்து அதாவது சைல்ட் ஹுட் க்ரெஷ்னா, அது அஜித்தான். அவ்ளோ ஹேண்ட்சம் பர்சன் அவர். அந்த ஸ்வீட்னெஸ் அப்படியே கன்டினியூ ஆகி, இப்ப அவரோட மிகப்பெரிய ரசிகையா ஆகிட்டேன்.

‘பிங்க்’ மாதிரி ஒரு படத்துல துணிஞ்சு நடிச்சிருக்கார். ‘நேர் கொண்ட பார்வை’ அவ்ளோ பிடிச்சிருந்தது. என்னோட எய்ம்ல ஒண்ணு, அஜித் சாரோட ஒரு படமாவது நடிச்சிடணும். அடுத்து வரும் வருஷங்கள்ல அந்த ட்ரீம் நிறைவேறும்னு நம்புறேன்.  

மை.பாரதிராஜா