FIRE GIRL!



கொரோனாவா... தியேட்டர் திறக்கலையா... பிசினஸ் டல்லா... இப்படி எதைப்பத்தியும் கவலைப்படாத ஒரே இயக்குநர் உலகத்திலேயே தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மாதான்.
செக்ஸும் க்ரைமுமாக இன்ஸ்டன்ட் மசாலா தெளித்து ‘ஏ’ ஆடியன்ஸை தன்வசம் இழுப்பதில் ஆர்ஜிவி-யை அடித்துக் கொள்ள ஆளே இல்லை!சமீபத்தில் தனது ஓடிடியில் ரிலீஸ் செய்த ‘த்ரில்லர்’ படத்தில் கவர்ச்சிப் புயல் அப்சரா ராணியை அறிமுகப்படுத்தி கிளுகிளுக்க வைத்தது போல, இப்போது நைனா கங்குலியைப் பிடித்து வந்திருக்கிறார்.

க்ளாமர் புயல் அப்சராவை விட, அம்பது மடங்கு அதிகம் அள்ளி வீசும் செக்ஸி மைனாதான் இந்த நைனா. இதற்கு முன் ஆர்ஜிவி இயக்கிய ‘பியூட்டிஃபுல்’லின் சக்சஸ் பார்ட்டியில் நைனாவுடன் செம கிக்காக குத்து டான்ஸ் ஆடினார் ஆர்ஜிவி. அதாவது ‘நைனாவின் காலில் விழுந்தே ஆடினார் ஆர்ஜிவி’ என டோலிவுட்டில் எல்லோரும் பேசும் அளவுக்கு சர்ச்சையில் சிக்கிய கெத்து லேடிதான் இந்த நைனா கங்குலி.

இந்த சர்ச்சையின் சூடு ஆறுவதற்குள் அடுத்த அதிரடியாக ‘டேஞ்ஜரஸ்’ பட போஸ்டர்களை தெறிக்கவிட்டிருக்கிறார் ஆர்ஜிவி. இப்படம்தான் இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் / ஆக்‌ஷன் படமாம். இப்படித்தான் போஸ்டரில் கேப்ஷன் வைத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

இப்படத்தில் அவரது இப்போதைய ஃபேவரைட்ஸான அப்சராவும், நைனாவும் கோவா கடற்கரையில் ‘ஈஷி’யபடி புரளும் படங்கள்தான் போஸ்டராக வெளியாகி இணையத்தை அதிர வைத்திருக்கின்றன.

ரைட். ‘த்ரில்லர்’ அப்சராவை எல்லோருக்கும் தெரியும். நைனா கங்குலி?
‘‘நானும் ஆர்ஜிவி சார் கண்டுபிடிப்புதான். பூர்வீகம் கொல்கத்தா. பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். காலேஜ் படிக்கும் போதே மாடலிங் வந்தாச்சு. அப்புறம் குடும்பத்தோடு மும்பைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம்.

சினிமா ஆசைல நிறைய கம்பெனிகளுக்கு போய் சான்ஸ் கேட்டேன். எதுவும் கைகூடலை. இந்த டைம்லதான் ஆர்ஜிவி சாரோட ‘வாங்கவீடி’ தெலுங்கு படத்துக்கான ஆடிஷன் மும்பைல நடந்தது. டிரை பண்ணி பார்க்கலாம்னு போனேன். கிட்டத்தட்ட முந்நூறு பெண்கள் வந்திருந்தாங்க. அத்தனை பேருக்கும் ஹீரோயின் கனவு இருந்தது.

என் நல்ல நேரம், ஆடிஷன்ல செலக்ட் ஆனேன். என்னால நம்பவே முடியலை. அவ்வளவு சந்தோஷமா இருந்தது. ஆந்திராவின் பொலிடிகல் பிரபலமான வாங்கவீடி மோகனரங்காவின் வாழ்க்கை வரலாறுதான் ‘வாங்கவீடி’ படம். அதுல நான் அவரது மனைவி கேரக்டர்ல நடிச்சேன்.ஆர்ஜிவி சொன்னதை அப்படியே பண்ணினதால, என் கேரக்டர் பேசப்பட்டுச்சு. அறிமுகமே பெஸ்ட் ஆக அமைஞ்சது.

அதன்பிறகும் எனக்கு கை கொடுத்தவர் ஆர்ஜிவி சார்தான். ‘மேரி பேட்டி சன்னி லியோன் பானா ஷாடி ஹை’ இந்தி ஷார்ட் ஃபிலிம்ல சன்னி லியோன் மாதிரி ஆகணும்னு நினைக்கற பெண்ணா என்னை நடிக்க வச்சார். பாலிவுட்லயும் தெரிய ஆரம்பிச்சேன். அப்புறம் பெங்காலி வெப் சீரீஸ்ல பிசியானேன். இடையே ஆர்ஜிவியே கூப்பிட்டு ‘பியூட்டிஃபுல்’ல சான்ஸ் கொடுத்தார். அதையடுத்து ‘ஜோஹர்’னு ஒரு வெப் சீரீஸ் பண்ணியிருக்கேன். ஓடிடி பிளாட்ஃபார்ம்ல வெளியாகியிருக்கு.

இப்ப ‘டேஞ்ஜரஸ்’ கிடைச்சிருக்கு. நானும் அப்சராவும் ஒருபால் காதலர்களா நடிச்சிருக்கோம். எங்க வலைல போலீஸையும், கேங்ஸ்டர்ஸையும் போட்டுத் தள்ளி யிருக்கோம். செம சஸ்பென்ஸ் படமா வந்திருக்கு. எப்ப ரிலீஸ்னு டைரக்டர்தான் சொல்லணும்...’’ நான்ஸ்டாப்பாக படப டக்கிறார் நைனா.

மை.பாரதிராஜா