இந்த காரின் விலை ரூ.75 கோடி!
இதோ வந்து விட்டது மணிக்கு 380 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் கார். அதன் பெயர் ‘புகாட்டி சென்டோடைசி’.காரை ஸ்டார்ட் செய்த 2.4 விநாடியிலேயே 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்தக் கார், 6.1 விநாடியில் 200ஐத் தொடுகிறது.
13.1 நொடியில் இதன் வேகம் 300 கிலோமீட்டர். இதுவரை எந்தவொரு காரும் இவ்வளவு விநாடிக்குள் 300 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டுக்கூட பார்த்ததில்லை. வேகமாகச் செல்லும் கார் மட்டுமல்ல; உலகின் விலையுயர்ந்த காரும் இதுவே.
ஆம்; இதன் விலை 8.5 மில்லியன் யூரோ. அதாவது 75 கோடி ரூபாய். பத்து கார்களை மட்டுமே தயாரிக்க ‘புகாட்டி’ நிறுவனம் முடிவு செய்கிறது. கார் பிரியரும் கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானுமான ரொனால்டோ முதல் ஆர்டரைக் கொடுத்து காருக்கு ஒரு நல்ல விளம்பரத்தையும் தேடிக் கொடுத்திருக்கிறார்.
த.சக்திவேல்
|