கொரோனா ஸ்வீட்!



உலகப் புகழ்பெற்ற ஒரு பெங்காலி ஸ்வீட் சந்தேஷ். பால் மற்றும் சர்க்கரையைக் கொண்டு செய்யப்படும் இந்த ஸ்வீட்டில் தயிர் அல்லது பனீரைக் கலந்தும் சுவையைக் கூட்டுவார்கள்.
விஷயம் இதுவல்ல. கொல்கத்தாவைச் சேர்ந்த பலராம் முல்லிக் அண்ட் ராதாராமன் முல்லிக் என்ற பாரம்பரிய ஸ்வீட் கடை இம்யூனிட்டி சந்தேஷ் என்ற புதுவகையான ஸ்வீட்டை அறிமுகம் செய்து டுவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளது.

மஞ்சள், ஏலக்காய், அதிமதுரம், ஜாதிக்காய், மிளகு, சீரகம் உட்பட பதினைந்து விதமான மூலிகைகளைச் சேர்த்து இந்த ஸ்வீட்டைத் தயாரித்துள்ளனர். சர்க்கரை, வெல்லத்துக்குப் பதிலாக இமயமலைத் தேனை இனிப்புக்காகப் பயன்படுத்தி யுள்ளனர்.

இந்த ஸ்வீட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிற்கு எதிராக நம் உடலைத் தயார்படுத்தும் என்பதால் இம்யூனிட்டி சந்தேஷுக்கு ஏகப்பட்ட மவுசு. ‘‘மக்கள் மத்தியில் ஆயுர்வேதத்தின் மீதான நம்பிக்கையை இந்த ஸ்வீட் வலுப்படுத்தும்...’’ என்கிறார் கடை உரிமையாளர் சுதீப்.

த.சக்திவேல்