விரட்டுகிறது வெளிச்சம்



“இன்னிக்கு நான் உன்னோடு படுக்க முடியாது...’’ என்று எதிர்வீட்டு கால் டாக்சி டிரைவர் இந்திரன் வெடுக்கென்று சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினான்.எதிர் போர்ஷனின் 45 டிகிரி கோணத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியே இரண்டே இரண்டு பேர் மட்டுமே கொண்ட அந்தச் சிறு குடும்பத்தின் அன்றாடக் காட்சிகள்  ராகவன் கண்களில் எப்போதாவது படும்.

இன்று அப்படி ஒரு காட்சி. ராகவன் மனசு கோலம் போட்டது.‘என்ன மனுஷன்டா நீ! யௌவனா, எப்பேர்ப்பட்ட அழகி! எந்தெந்தக் கருமங்களோ தலையிலே கிரீடம் மாட்டிக்கொண்டு உலக அழகி, இந்திய அழகின்னு ஆயிரம் விளக்கு வெளிச்சத்திலே இடுப்பையும் மாரையும் குலுக்கிக்கிட்டு நிக்குதுங்களே! எல்லாரையும் தூக்கி அடிக்கிற இந்த அழகி... உன் மனைவிடா மனைவி!

இவளோட வாழ எத்தனை ஜென்மம்டா நீ புண்ணியம் பண்ணியிருக்கணும்? அந்தக் குட்டி பல்பின் நீலவெளிச்சத்தில் அவள் அழகு என்னமாய் ஜொலிக்கிறது!’ அவன் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று யௌவனாவுக்குத் தெரியும். திரும்பி ராகவன் மீது ஒரு பார்வை வீசிவிட்டு யௌவனா, உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போய்விட்டான் போலும்!

ராகவன் வாசற் கதவை மூடிக்கொண்டு அறையில் போய் படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. யௌவனா, உருவம் அவன் கண் முன் நின்றது.
யௌவனா உண்மையிலேயே நல்ல யௌவனம். ‘மாகுரு தன ஜன யௌவன கர்வம்’ என்று பஜகோவிந்தத்தில் இருந்து தன்னை அறியாமல் அவன் நாக்கில் ஒலி புரண்டது. அந்த வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சந்த இசையோடு பாடிப் பாடிப் பார்ப்பான்.

தன் குரல் மீதே அவனுக்கு ஒரு மோகம். வெளியே பாட மாட்டான். நாலு பேர் நடுவில், ஓர் சபையில் அவன் பாட விரும்பியதே இல்லை. தனியே இருக்கும்போது பாடிப் பாடி கேட்டுக் கேட்டு ரசிப்பான். சுற்றிலும் யாரும் இல்லையென்று உறுதியானால் ஒழிய அவனுக்கு வாய்விட்டுப் பாடவராது.
சமீபத்தில் புதிய செல்போன் வாங்கியதில் இருந்து, தானே பாடி அதை ரிக்கார்ட் செய்துகொள்வான்.

யௌவன கர்வம்! தன் பாட்டின் மீது தனக்கு ஒரு ரகசிய கர்வம் இருப்பது போல் இந்த யௌவனாவுக்கும் அவளது யௌவனத்தின் மீதும் அவள் அழகின் மீதும் ஒரு கர்வம் இருக்குமோ?அவள் வெளியே வந்தால் பல பருந்துக் கண்கள் பார்வையிலேயே அவளை அங்கம் அங்கமாகக் கொத்தும் என்று பயப்படுகிறாளோ? ஏன் இப்படி அந்த சிற்றறையில் சிறைக் கைதி போல் சிக்கிக்கொண்டு தவிக்கிறாள்? எப்படி இந்த கால் டாக்ஸி டிரைவரிடம் மாட்டினாள்? இவன் கணவனா? காதலனா? அவளுக்கும் அவனுக்குமிடையே என்ன உறவு? அடிக்கிறான். உதைக்கிறான். மிதிக்கக் கூட மிதிப்பான் போல் இருக்கிறது!

‘‘மிதிங்கோ... மிதிங்கோ... ஒங்க ஆசை தீர மிதிங்கோ...’’ என்று அவள் உரக்கக் கத்தியது ஒரு நாள் மூடிய ஜன்னல் வழியே வெளியே கேட்டதில் இருந்து அந்த ‘மிதி’ விவகாரம் தெரிந்தது எதிர் போர்ஷனில் ஏதோ மர்மம் இருக்கிறது! கண்டுபிடித்து அதற்கு, தான் ஏதாவது செய்ய வேண்டுமோ!
மனசின் அலைபாய்ச்சலுக்கு தனக்குள் பஜகோவிந்தம் பாடினால் ஒரு சாந்தி கிடைக்கும். ராகவன் பாட ஆரம்பித்தான்.
குரல் வெளிவருவதற்கு முன் அவன் குரலே அவனுக்குக்காகப் பாடுவது போல் ஒலி கேட்டது. ஒரு கணம் திகைத்து நின்றான்.
ஒலி எதிர் ஜன்னலில் இருந்து வந்தது.

ஏதோ செல்லின் கரகரப்பு கலந்து கேட்டது.தான், பாடித் தனக்காகத்தானே ரிக்கார்ட் செய்த பாட்டு அது.ராகவன் தலை திருப்பி தன் செல்போன் மேஜை மீது இருக்கிறதா என்று பார்த்தான். அது அங்கேயே இருந்தது.தன் செல்லில் ரிக்கார்ட் செய்தது யௌவனாவுக்கு எப்படிப் போயிருக்கும்?
வாட்ஸ் அப்..? யார் அனுப்பியது..? எப்படிப் போயிற்று..?ராகவன் மூடியிருந்த எதிர்வீட்டு ஜன்னல் அருகே சென்றான். கீழே நின்று உற்றுக் கேட்டான்.
அதே ‘மாகுரு தன ஜன யௌவன கர்வம்’. சட்டென்று அவன் குரல் நின்று விட்டது. அடுத்து ஒரு பெண் குரல். அதே ‘மாகுரு தன ஜன யௌவன கர்வம்...’

யௌவனாவின் குரல். மிக மிக இனிமையாக கண்ணையே சொக்க வைக்கிற குரல்... அவள், தானே பாடிப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
மீண்டும் ராகவன் குரல். சிறிது நேரம் கேட்டு நின்றது. மீண்டும் யௌவனாவின் குரல்.இன்னும் பொறுக்க அவனால் முடியவில்லை.கதவை வலது கையால் லேசாகத் தட்டினான்.பாட்டு நின்றது.கதவு திறக்கவில்லை. ஜன்னல் மட்டும் திறந்தது. அதுவும் அரை ஜன்னல். யௌவனாவின் பாதிமுகம் மட்டும் தெரிந்தது ‘‘என்ன வேணும்?’’

‘‘பேசணும்...’’
அவள் கண்கள் ஊடுருவி அவனைப் பார்த்தன. ‘‘என்ன பேசணும்?’’
‘‘அந்தப்பாட்டு...’’ ஒரு துளி மௌனம். ‘‘வாட்ஸ்அப்ல வந்தது...’’
‘‘யார் அனுப்பிச்சது?’’

‘‘அது நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை...’’
‘‘இல்லே... நான் பாடியது... என் குரல்...’’‘‘குரல்லேருந்து ஒலி வெளியேறினா அது எல்லோருக்கும் சொந்தம்...’’
‘‘உள்ளே வந்து கொஞ்ச நேரம் பேசணும்...’’யௌவனாவின் அழகிய முகம் கோபத்தால் சுருங்கி மாறியது. ‘‘மிஸ்டர்! என்ன பேசினாலும் வெளியே இருந்து கூட பேசலாம். ரெண்டு பேருக்கும் காது கேட்கிறது...’’
‘‘அது வந்து...’’

‘‘எதுவும் வரவேண்டாம். போகவும் வேண்டாம். ஐ நோ எல்லாம் எங்கே முடியும்னு. எல்லாம் பாத்தாச்சு...’’ ‘‘நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க...’’‘‘ஏன் நான் உங்களை தப்பாவோ சரியாவோ புரிஞ்சுக்கணும்?’’
அதற்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. பதிலே இல்லை போலவும் தோன்றியது.

‘‘உங்களுக்கு என் அழகோட தொடர்பு வச்சுக்கத் தோணறது. இப்படி எவ்வளவோ பேருக்குத் தோணித்தான் எங்கேயோ ஓர் இடத்திலே நான் சிக்கிக்கிட்டேன். அனுபவிக்கிறேன். முடிவு என்னனு தெரிஞ்சுக்கத்தான் அடைபட்டுக் காத்திருக்கேன்...’’‘‘என்னாலே என்ன முடியுமோ ஹெல்ப் பண்ண விரும்பறேன்!’’அவள் சிரித்தாள். கசப்பான சிரிப்பு. ‘‘நீங்க சிவனா இருந்து நான் ஒளவையாரை இருந்தா கேட்பேன். எனக்கு இந்த அழகு வேண்டாம். அந்த வெளிச்சமும் வேண்டாம். தரமுடியாது உங்களாலே! ஸாரி...’’

அவள் ஜன்னலை மூடிக்கொண்டாள். ஜன்னல் வழியே கசிந்த நீல வெளிச்சமும் அவிந்து போயிற்று. அந்த கொஞ்ச நேர வெளிச்சம் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையைத் தொட்டு இருண்டு போயிற்றுராகவன் மறுநாளே அந்த அறையைக் காலி செய்தான்.

கேம் கேர்ள்!

சம்மருக்கு இதமாக ஐஸ்க்ரீம் பேபியாகி விட்டார் ‘பூமி’ ஹீரோயின் நிதி அகர்வால். தனக்கு பிடித்த மில்க் சாக்லெட் ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சுவைத்து மகிழும் நிதி, பகல் பொழுதுகளில் ஆன்லைன் கோர்சில் சேர்ந்து அறிவை அப்டேட் செய்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் மொபைலில் பப்ஜி விளையாடியவர், இப்போது ஐபாடில் பப்ஜி விளையாடி மகிழ்கிறார்.

கிச்சன் ஹாசன்

பியானோ பேபி ஸ்ருதிஹாசன், இப்போது கிச்சன் கில்லாடியாக மினுமினுக்கிறார். விதவிதமான டிஷ்களை எல்லாம் சமைத்து பழகியதுடன் அதை வீடியோவாகவும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். ‘‘லாக்டவுன்ல என் பியானோவும், பூனைக் குட்டிகளுமாக பாதுகாப்பா இருக்கேன. இன்னும் சிறப்பான பாதுகாப்புக்கு லைஃபை ரீஸ்டார்ட் செய்வது அவசியமா இருக்கு...’’ என சமூகத்துக்கு ஒரு மெசெஜையும் உதிர்த்திருக்கிறார் ஸ்ருதி.

சரணாகதி பஜ்வா!

பிரிட்டீஷ் கொலம்பிய எழுத்தாளரான எக்ஹர்ட் டோலே(Eckhart Tolle)வின் தத்துவம் ஒன்றை உதிர்த்திருகிறார் பூனம் பஜ்வா. ‘‘சில நேரங்களில் சரணாகதி என்றால் இப்படியும் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒருவரை ஒருவர் முழுதாகப் புரிந்து கொள்ளுதல்... அவருக்குத் தெரியாமலேயே அவருடன் இணைக்கமாக இருப்பதுதான் சரண்டரின் பொருள்’’ என்ற எக்ஹார்ட்டின் தத்துவத்தைக் கொட்டியிருக்கிறார் பூனம் பஜ்வா. யாரிடம் சரணாகதி அடைந்தாரோ அல்லது சரண்டர் ஆகச் சொல்கிறாரோ?! ஆன்சர் ப்ளீஸ் பஜ்வா!

வையவன்