ரெஜினாவின் Addictions!
கோலிவுட்டில் ஹேப்பியாக பறக்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா. ‘‘எம்பூட்டு இருக்குது ஆச... உன் மேல... அத காட்டப்போறேன்...’’ என்ற பாடலில் கிக்கேற்றிய ரொமாண்டிக் பறவை. இப்போது அரவிந்த்சாமியுடன் ‘கள்ளபார்ட்’, வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’, சிம்புதேவனின் ‘கசடதபற’, கார்த்திக்ராஜுவின் ‘சூர்ப்பனகை’ என கொரோனா இயரிலும் கொத்தாக கெத்து காட்டுகிறார் ரெஜினா.
நீங்க நடிக்க வர்றதுக்கு முன்னாடி சைக்கியாட்ரிஸ்ட் ஆகணும்னு விரும்பினீங்களாமே..?
ட்ரூ. ஆனா, நான் ஸ்கூல்ல படிக்கும்போது, அதாவது ஒன்பதாவது படிக்கும்போதே, டாக்டராகணும்... அதுவும் இராணுவத்துல சேர்ந்து ஆர்மி டாக்டராகணும்னு விரும்பினேன். அப்ப, எங்க அம்மாதான் ‘டாக்டர் புரொஃபஷன் அவ்ளோ ஈஸி கிடையாது. அதுக்கு நீ நிறைய ஹார்டு ஒர்க் பண்ணியாகணும்’னு சொன்னாங்க. உடனே, டாக்டர்ஸ் பத்தி, மக்களோட மனநிலைனு பல விஷயங்களையும் தெரிஞ்சுக்க நிறைய புக்ஸ் படிச்சேன். டாக்டர்ஸோட ஹார்டு ஒர்க் புரிஞ்சது. அவங்கள மாதிரி உழைக்கறது சிரமம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஆனா, மக்களோட உளவியல் ரீதியான விஷயங்கள் படிக்கப் படிக்க சைக்காலஜி மேல ஈர்ப்பு வந்திடுச்சு. அப்புறம், உமன்ஸ் காலேஜ்ல சைக்காலஜி படிக்கும் போதுதான், மனநல மருத்துவர் ஆகணும்னு விரும்பினேன். காலேஜ் டைம்ல மாடலிங், சினிமா ஆஃபர்ஸ் வந்திடுச்சு. இண்டஸ்ட்ரீ வந்த பிறகும் கூட ‘ஒரு அஞ்சு வருஷம் நடிப்போம். இந்த ஃபீல்டு செட் ஆகலைனா, சைக்கியாட்ரிஸ்ட் ஆகிடலாம்’னு நினைச்சேன்.
மல்டி ஸ்டார் படங்களா பண்றீங்களே..?
நல்ல விஷயம்தானே! ஒரு படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி அது மல்டி ஸ்டார் படமா அல்லது தனி ஹீரோ, ஹீரோயின் படமானு எல்லாம் எதையும் மனசில நிறுத்திக்க மாட்டேன். திரைல அஞ்சு நிமிஷம் வந்துட்டு போனாலும் என்னால ஆடியன்ஸை ஈர்க்க முடியும்னு நம்புவேன். அதுக்காக அஞ்சே அஞ்சு நிமிஷம் மட்டும்தான் நம்ம கேரக்டர் இருக்கும்னு நினைச்சு படங்கள் கமிட் பண்றதில்ல. ஒரு நல்ல படம் பண்றோம். ஒரு நல்ல படத்துல நாமளும் இருக்கோம் என்பதே ஹேப்பியானது.
இப்ப டோலிவுட்ல அதிக படங்கள் பண்றதில்லையே..? யார் சொன்னது..? அங்கயும் நிறையப் படங்கள் பண்றேனே! ‘சூர்ப்பனகை’ கூட தெலுங்கிலும் வருது. டோலிவுட்ல கணிசமான படங்கள் பண்ணியிருக்கேன். அங்க சமீபத்துல நடிச்ச படங்கள் அத்தனையிலும் நல்ல ரோல்ஸ். இப்ப தமிழ்ல நடிக்கற படங்கள்ல என் ரோல் ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா அமைஞ்சிருக்கு.
இன்னொரு முக்கியமான விஷயம், லாங்குவேஜ் பார்த்து படங்கள் செலக்ட் பண்றதில்ல. நல்ல ஸ்கிரிப்ட், அதுல என் கேரக்டர் எப்படினு தெரிஞ்ச பிறகே செலக்ட் பண்றேன். ரெஜினா ஒரு ஃபேஷன் அடிக்ட்னு சொல்லலாமா..?
அப்படிச் சொல்லிட முடியாது. அடிக்டட்னு சொல்றதை விட, ஃபேஷன் ரொம்ப பிடிக்கும்னு வைச்சுக்கலாம். இப்ப பப்ளிக் ஃபிகரானதும் எல்லாரும் என்னை ‘செம ஸ்டைலீஷா கலக்கறீங்க... காஸ்ட்யூம்ல அசத்தறீங்க’னு சொல்றப்ப, மனசுக்குள்ள மகிழ்ச்சி துள்ளும். ஏன்னா, நான் நடிக்க வரும் போது, ஸ்டைலீஷா இருக்கணும்... லுக் சரியா வரணும்... டிரெஸ்ஸிங் சென்ஸை பாராட்டணும்னு ஒரு ஃபேஷன் கேர்ள் ஆக ஆசைப்பட்டிருக்கேன்.
அந்த டைம்ல ஃபேஷன் பெரிய லெவல்ல இருந்தது. இப்பவுமே ஃபேஷன் வேர்ல்டு ஒரு பெரிய கடல். அப்புறம் நடிக்க வந்த பிறகுதான் எனக்குனு ஒரு ஸ்டைலீஷ் டீம் அமைஞ்சது. ஃபேஷன் பத்தின புரிதல் வந்துச்சு. ஓகே... இது நமக்கு செட் ஆகும்... இந்த ஈவன்ட்டுக்கு இது அணியலாம்... இந்த காம்பினேஷனும் ட்ரை பண்ணலாம்னு முயற்சிக்க ஆரம்பிச்சேன்.
அந்த ட்ரையல் கைகொடுக்கவும் செஞ்சது. ஏன்னா, நடிக்க வரும் போது அவ்ளோ ஃபேஷன் அவசியப்படல. ஆனா, நடிகையா ஒரு பொசிஷனுக்கு வந்த பிறகு ஃபேஷனோட முக்கியத்துவம் கவனிக்கப்படுது. ஸோ, ஐ லுக் மை பெஸ்ட்டா இருக்கணும்னு நினைக்கறேன். நீங்க சென்னை பொண்ணா..? ஹைதராபாத் பொண்ணா..?
சென்னை பொண்ணு! ஸ்கூல், காலேஜ் எல்லாம் இங்கதான் படிச்சேன். ஆனா, மெட்ராஸ் பாஷைல எனக்கு பேச வராது. ஏன்னா, வீட்ல இங்கிலீஷ்லதான் பேசிக்குவோம். இப்ப எனக்கு வீடு ஹைதராபாத்ல இருக்கறதால சென்னையை ரொம்ப மிஸ் பண்றேன். இங்க கிடைக்கற தோசை ரொம்ப பிடிக்கும். இங்க உள்ள வார்ம் க்ளைமேட் பிடிக்கும். மகாபலிபுரம் போனேன்னா, அங்க ஸர்ஃபிங் விளையாடுவேன். சென்னை மெமரீஸ் அவ்ளோ இருக்கு!
செய்தி: மை.பாரதிராஜா
படங்கள்: சுரேஷ் சுகு
|