இவங்க LONDON சண்டக்காரி!



‘‘இந்த ‘சண்டக்காரி’, ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட். கலகலப்பான படம். சம்மர் ஹாலிடேல குடும்பமா உட்கார்ந்து பார்த்து ரசிக்கணும்னு எடுத்தோம். கடந்த ஏப்ரல் மாசமே ரிலீஸுக்கு பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, லாக் டவுன் வந்திடுச்சு. தியேட்டர்கள் இல்ல.
இது மீடியம் பட்ஜெட் படம். தயாரிப்பாளர்கள் பண்ணின முதலீட்டையும் நினைக்க வேண்டியிருக்கு. இப்ப சினிமாவோட ஃப்ளேவரும், பிசினஸும் மாறிக்கிட்டே வருது.

ஆரம்ப காலங்கள்ல தியேட்டர் வருமானம் மட்டுமே உண்டு. அதன்பிறகு கன்னடம், மலையாளம்னு ரிலீஸ் ஆகி ஒரு செட் ஆஃப் வருமானம் வரத் தொடங்கிச்சு. அடுத்து, சாட்டிலைட் ரைஸ்ட்ல ஒரு தொகை கைக்கு வரும். அப்புறம், வெளிநாட்டு விநியோக உரிமை மூலம் கொஞ்சம் பணம்.
இப்ப அடுத்த லெவலா ஓடிடி பிளாட்ஃபார்ம்ஸ் அமைச்சிருக்கு.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மாதிரி சினிமாவும் மாற்றம் அடைஞ்சிட்டே வருது. அது புத்துணர்வு அடையறதாலதான் எங்களாலயும் கொஞ்சம் ஃப்ரீயா சுவாசிக்க முடியுது...’’ நிறைவாகப் பேசுகிறார் இயக்குநர் ஆர்.மாதேஷ். ‘முதல்வன்’, ‘சாக்லெட்’, ‘மதுர’ படங்களின் தயாரிப்பாளர். இப்போது விமல், ஸ்ரேயா கூட்டணியில் ‘சண்டக்காரி’யை இயக்கியிருக்கிறார்.த்ரிஷாவுக்கு பிறகு ஸ்ரேயாவா..?

கதை அப்படி செட் ஆகிடுச்சு. என்னோட முந்தைய படம், ‘மோகினி’யை முழுக்க முழுக்க ஹாரரா பண்ணினேன். மறுபடியும் அதே ஜானர் வேணாம், வெரைட்டியா, லைட் மைண்டடா செய்யலாம்னு விரும்பினேன். அப்படி உருவானதுதான் ‘சண்டக்காரி’. லண்டன்ல மிகப்பெரிய ஒரு ஆப் டெவலப்மென்ட் கம்பெனியோட பாஸ், ஹீரோயின். அங்க வேலை பார்க்கற ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர்தான் ஹீரோ.

அவங்க ரெண்டு பேருக்குமிடையேயான விஷயங்கள்தான் கதை. ஒரு கம்பெனிக்கு சிஇஓ லுக்ல கெத்தா, அதே டைம்ல ஸ்டைலீஷாகவும் இருக்கற ஹீரோயின மைண்ட்ல வச்சு, ஸ்கிரிப்ட் எழுதினேன். பெரும்பாலான ஷூட் லண்டன்ல நடக்கறதால, அதுக்கு தகுந்தா மாதிரி ஸ்ரேயாவின் கால்ஷீட் கிடைச்சுது. இந்தியாவில் கொஞ்சம் வில்லேஜ் போர்ஷனும் இருக்கு.

படத்துல கே.ஆர்.விஜயா மேம், பிரபு சார், உமா பத்மநாபன், தேவ்கில், ரேகா, சத்யன்னு பெரிய பட்டாளமே உண்டு. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு கே.ஆர்.விஜயா மேம் நடிச்சிருக்காங்க. அவங்ககிட்ட இந்தக் கதையை சொன்னேன். ‘நான்தான் நடிக்கணும்னு எதிர்பார்க்குறது ஏன்’னு கேட்டாங்க. ஒரு பவர்ஃபுல்லான பாட்டி கேரக்டருக்கு அவங்க ரொம்ப பொருத்தமா இருந்தாங்க. அதை அவங்ககிட்டேயே சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டாங்க,டெக்னிக்கல் டீமும் அதிரடியானதுதான். ‘மோகினி’ குருதேவ், இதற்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அவர் ஜீவாகிட்ட உதவியாளரா இருக்கும்போதே நாங்க நண்பர்கள்.

வெளிநாடுகள்ல ஷூட் பண்றது சாதாரண விஷயம் கிடையாது. அதுக்கு ஒரு ஃபயர் இருக்கணும். குவாலிட்டியையும் மிஸ் பண்ணிடக்கூடாது. அந்த டேலன்ட் குருதேவ்கிட்ட நிறைய உண்டு. அம்ரீஷ் இசையமைச்சிருக்கார். அவரோட முதல்முறையா ஒர்க் பண்ணியிருக்கேன். அவரும் அருமையா இசையமைச்சிருக்கார்.என்ன சொல்றார் ஸ்ரேயா?

ஸ்ரேயாகிட்ட இந்தக் கதையை சொல்லும்போதே, ‘சார், நான் ரொம்ப சாஃப்ட் கேர்ள். ஆனா, இந்தக் கேரக்டர் ரொம்ப டாமினேட்டா இருக்கே? என் மேல எப்படி நம்பிக்கை வச்சீங்க? இதை நான் பண்ணிட முடியுமா’னு ஆச்சரியமா கேட்டாங்க. ஆனா, அப்படி டவுட்டா அவங்க கேட்டா கூட, நான் எதிர்பார்க்கறதை விட பிரமாதமா நடிச்சுக் கொடுத்திருக்காங்க.

நான் ‘மோகினி’யை லண்டன்ல ஷூட் பண்ணும் போதே, சில இடங்களை மனசுல நோட் பண்ணி வச்சிருந்தேன். அங்கதான் இந்தப் பட ஷூட் நடந்தது. அங்க ஒரு ரோட்டுல விமல் - ஸ்ரேயா காம்பினேஷன்ல சேஸிங் சீன் எடுத்துட்டு இருந்தோம். அவங்க ரெண்டு பேரும்  ஹேண்ட்பேக்கோடு ஓடுறதை பார்த்துட்டு, லண்டன் போலீசே, ஸ்பாட்டுக்கு வந்திடுச்சு.

அப்புறம், இது ஷூட்டிங்னு புரிய வச்சு அனுப்பினோம். அதேபோலத்தான் லண்டன் ஏர்போர்ட் இமிகிரேஷன்லயும் படப்பிடிப்பு நடத்தியிருக்கோம்.
நீங்க ஷங்கர் சாரோட நட்புல இருக்கறவர். அதனால இந்தக் கேள்வி. ‘இந்தியன் 2’ விபத்துக்குப் பிறகு அவர் எப்படி இருக்கார்?

அந்த ஷூட்டிங்கில் நடந்தது ஒரு ஆக்ஸிடெண்ட். அந்த படப்பிடிப்பு நடந்தப்ப நான் அங்க இல்ல. ஸோ, அதைப் பத்தின புரிதல் எனக்கு குறைவு. ஆனா, ஒண்ணு மட்டும் உறுதியா சொல்ல முடியும். தன் உதவியாளர்களை எல்லாம் குடும்பமா நடத்தறவர் ஷங்கர் சார். அதனால அந்த விபத்து நிச்சயம் அவரை பாதிச்சிருக்கும். அதில் இருந்து அவர் மீண்டு வர்றது கஷ்டமானதுதான்.  

சாரும் நானும் எங்காவது ஃபங்ஷன்ல சந்திக்கும் போது பேசிக்குவோம். இப்ப அவரும் பிசியா இருக்கார். நானும் ஷூட்டிங் போய்க்
கிட்டிருக்கேன். தயாரிப்பாளர் மாதேஷ் என்ன பண்றார்..?

இயக்குநர் மாதேஷுக்கு உதவியா இருக்கார்! ‘முதல்வன்’, ‘சாக்லெட்’, ‘மதுர’னு படங்கள் தயாரிச்சதால, ஒரு புரொட்யூசர் நிலைமை புரியும். நான் இயக்குற படங்கள்ல கூட என்னோட தயாரிப்பாளர்களுக்கு வீண் செலவுகள் வைக்கக் கூடாதுனு நினைச்சு, ஒர்க் பண்ணுவேன்.

பண்ணிட்டிருக்கேன். அதனாலேயே என் பட புரொட்யூசர்கள் ‘நீங்களே பார்த்துக்குங்க’னு பொறுப்பை எங்கிட்ட தைரியமா விட்டுடறாங்க. இதனால எனக்கு இன்னும் பொறுப்பு அதிகமாகுது. இப்ப டைரக்‌ஷன்ல கவனம் செலுத்தறதால, தயாரிப்பு குறித்து யோசிக்கலை. அதுக்காக படமே இனி தயாரிக்க மாட்டேன்னு அர்த்தமில்ல.கண்டிப்பா அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பேன்!

மை.பாரதிராஜா