ஜே... ஜே!



காதல் ஸ்பெஷல் வெளியிட்டு எல்ேலாரையும் மகிழச் செய்துவிட்டீர்கள். காதலையும், காதலர்களையும் கவுரவப்படுத்திய குங்குமத்துக்கு ஜே ஜே!
- ப.மூர்த்தி, பெங்களூர்; நெல்லை குரலோன்,
பொட்டல்புதூர்; கே.விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.

தண்ணீர்க் குழாயில் மதுபானம் வந்த அதிசயம் உள்ளிட்ட செய்திகள் நியூஸ் சாண்ட்விச்சிற்கு சுவை சேர்த்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வறுமையை வென்று உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாதித்த யஷாஸ்வியே இளைஞர்களின் ரோல் மாடல். திறமை இருந்தால் நிச்சயம் தனி இடத்தைப் பிடிக்க முடியும் என்பதை தன் ஆட்டத்தின் மூலம் நிரூபித்துவிட்டார்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு.

‘காதல் என்பது அலங்காரம் செய்யப்பட்ட காமம்’ என்று  மனநல மருத்துவர் ராமானுஜம் நச்செனக் கூறியது உணர்வுபூர்வமான உண்மை.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; இராம.கண்ணன், திருநெல்வேலி; வண்ணை கணேசன், சென்னை

சிறந்த தமிழ் காதல் திரைப்படங்களை வரிசையாகப் போட்டு பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள்.
- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை; கே.விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; கே.ெசல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.

‘திரைப்பாடல்களில் மன்மதலீலை’ கட்டுரை மகுடமாக அமைந்தது. கவியரசரும், வாலிபக் கவிஞரும் மன்மதலீலை வரிகளில் கில்லாடிகள்தான். கவிஞர்களின் கற்பனையை சிலாகித்துச் சொன்ன யுகபாரதி பாராட்டுக்குரியவர்.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

அஷ்வத்-பவித்ரா; பாபு யோகேஸ்வரன்-பாரதி ஜோடிகளின் சுவாரஸ்யம் ததும்பிய காதல் அனுபவங்கள் அழகூட்டின.
- நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

‘காலம்தோறும் காதலர் தினம்’ படித்தபோது காலக் கப்பலில் பயணம் செய்து அந்தந்த இடங்களுக்குச் சென்று வந்த திருப்தி ஏற்பட்டது.
- ரா.புனிதவதி, பொள்ளாச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

‘நான்’ கட்டுரையில் ெசந்தில் எதார்த்தமாக தன்னைப் பற்றிச் சொல்லி நிஜத்தில் ஹீரோவாகிவிட்டார். அவர் கவுண்ட மணியுடன் இணைந்து நடத்திய நகைச்சுவை ராஜாங்கம் சாகாவரம் பெற்றது.
- நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; மேட்டுப் பாளையம் மனோகர், கோவை; க.நஞ்சையன், பொள்ளாச்சி; வண்ணை கணேசன், சென்னை.

விதவிதமான காதலையும், காதலர்களையும் சொன்ன டாப் 10 உலகக் காதல் படங்கள் கலக்கல்!
- கலிவரதன், கீழ்க்கட்டளை.

வாசகர்களின் ரசனையை திசைதிருப்புகிற நம்பிக்கையுடன் தனது நாவல்களை பட்டை தீட்டுகிற எழுத்தாளர் செந்தில்குமாருக்கு வாழ்த்துகள்.
- ஜெயராமன், கோவிலம்பாக்கம்.  

ரீடர்ஸ் வாய்ஸ்