ரெண்டு!



முரகாமி ரசிகை!

‘மாஸ்டர்’ குயின் மாளவிகா மோகனன், ஷூட்டிங் பிரேக்குகளில் ஆங்கிலப் புத்தகங்களுடன் ஸ்பாட்டில் ரிலாக்ஸ் ஆகிறார். ஜப்பானிய எழுத்தாளர் Haruki Murakamiயின் ரசிகையான மாளவிகா சமீபத்தில் தென்னாப்பிரிக்கா பறந்து வந்திருக்கிறார். அங்கே அந்தி சாயும் வேளையில் அடர்ந்த காடுகளைப் பார்த்து சிலிர்த்த போது, முரகாமியின் வரிகள்தான் நினைவிற்கு வந்ததாம்.

அதிலும், ‘‘The sun sliced through the windshield, sealing me in light. I closed my eyes and felt the warmth on my eyelids. Sunlight traveled a long distance to reach this planet; an infinitesimal portion of that sunlight was enough to warm my eyelids. I was moved. That something as insignificant as an eyelid had its place in the workings on the universe, that the cosmic order did not overlook this momentary fact...’’ என்ற கவிதை வரிகள் மாளவிகாவின் நெஞ்சை அள்ளியிருக்கிறதாம்..! படிச்ச பொண்ணு... படிச்ச பொண்ணுதாம்ப்பா!

நல்ல அம்மா!

நடிகைகளில் ‘வாரணம் ஆயிரம்’ சமீரா ரெட்டி, ஒரு திறந்த புத்தகம் + தைரியசாலி. இப்போது ஒரு குழந்தைக்கு அம்மாவான சமீரா, தான் வாயும் வயிறுமாக இருக்கும்போதே, அண்டர் வாட்டரில் உடற்பயிற்சிகள் செய்து வீடியோ ஷூட் செய்து ஆச்சரியமூட்டியவர்.

சமீபத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மகத்துவத்தை, அவசியத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ‘ஹேப்பி அம்மா ஹேப்பி பேபி’க்கான அனுபவங்களாக இருப்பதால் சமீராவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.l

மை.பா.