விஜய்யின் அடுத்த படம்!



லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் இப்போது விஜய் நடித்து வருகிறார்.

வரும் ஏப்ரலில் ‘மாஸ்டர்’ வெளியாக இருக்கும் நிலையில் அடுத்து விஜய் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி கோலிவுட் முழுக்க பரபரக்கிறது.
இந்நிலையில்தான் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அந்தத் தகவல் கசிந்திருக்கிறது.யெஸ். ‘மாஸ்டர்’ படத்துக்குப் பின் விஜய்யை இயக்கப் போகிறவர் சுதா கொங்கரா!

‘இறுதிச் சுற்று’ படத்தைப் பார்த்ததுமே சுதா கொங்கராவை அழைத்தார் விஜய். அப்போது ஆரம்பித்த பேச்சுவார்த்தை இப்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. சுதா சொன்ன லைனும் அதை டெவலப் செய்து அவர் சமர்ப்பித்த பவுண்டட் ஸ்கிரிப்ட்டும் விஜய்க்கு பிடித்துவிட்டதாம்.ஸோ, மே மாதத்தில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கும்
என்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா