அவன்



சென்ற இதழ் தொடர்ச்சி...

கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் மாஸ்டர் சரியாக விஷயத்தை அதன் தீவிரம் குறையாமல் எடுத்துச் சொன்னதான திருப்தி முகத்தில் தென்பட்டது.
மாஸ்டரைப் பிடிக்காதவர்கள் தவிர மற்றவர்கள் அவரைக் கொஞ்சம் பெருமையோடு பார்த்தார்கள்.‘‘அவன் பள்ளிவாசலுக்குள்ள நொழைஞ்சதுக்கா அவனைக் கட்டி வச்சு அடிச்சிருக்கீங்க?’’ ஹாஜியாரின் குரலில் அதிருப்தி பலமாகத் தென்பட்டதும், மாஸ்டர் ஆதரவாளர்கள் மாஸ்டரை எரிப்பது போலப் பார்க்கத் தொடங்கினார்கள்.

‘‘அதில்ல காக்கா... இவன் இன்னொரு தப்பும் செஞ்சிருக்கான்...’’ இம்முறை வேறு யாரும் வாய் திறக்காததால் சுலைமான் வாய் திறந்தான்.‘‘அப்படி என்ன தப்பு செஞ்சான்? சொல்றதைத் தெளிவாச் சொன்னாத்தானே எனக்கும் தெரியும்.

அவசரமா பள்ளி வாசல் பக்கம் வரைக்கும் வாங்கன்னு கூப்பிட்டீங்க. என்னனு கேட்டதுக்கு, ஒருத்தனைக் கட்டி வச்சிருக்கோம், வந்து விபரமாக் கேளுங்கன்னு சொன்னீங்க. என்னமோ ஏதோன்னு வந்தா, பள்ளிவாசலுக்குள்ள வந்தான், அதான் கட்டி வச்சிருக்கோம்னு சொல்றீங்க. வெக்கமா இல்ல உங்களுக்கு? அவன் வந்தா என்ன கெட்டுப் போச்சு உங்களுக்கு?’’ ஹாஜியாரின் குரலில் அதட்டும் தொனி தென்பட்டது.

‘‘அப்படியில்ல ஹாஜியார். இவன் பள்ளிவாசல்ல நொழஞ்சதுக்காக அவனைக் கட்டி வைக்கலை. ரெண்டு மூணு நாளாவே இவன் பள்ளிவாசலுக்கு வந்து போய்க்கிட்டு இருக்கான். நாம பள்ளிவாசல்ல ‘சஹர்’ செய்றதுக்காக சோறு வச்சிருக்கோம். இந்த ‘மொஹல்லா’ல இருக்குறவங்க மட்டும் காலைல வந்து ‘சஹர்’ செய்யுற மாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கோம்...’’ காதர் அண்ணன் மெதுவாக எடுத்துச் சொன்னார்.

‘‘ஆமா அது தெரிஞ்ச விசயம்தானே? நோன்பு வந்ததுன்னா காலைல ‘சஹர்’ வைக்குறதுக்கும் சாயங்காலம் நோன்பு திறக்க கஞ்சி வைக்குறதுக்கும் நம்ம ‘மொஹல்லா’ல ஏற்பாடு வருசா வருசம் நடக்குற விசயம்தானே? அதுல என்ன இருக்கு?’’ ஹாஜியார் குரலில் இப்போது லேசான எரிச்சல் தென்பட்டது.

‘‘இந்தப் பய ரெண்டு நாளா இங்கன வரான் ஹாஜியார். காலைல வந்து தொப்பி போட்டுக்கிட்டு எல்லாரு மாதிரியும் சஹர் செஞ்சிக்கிட்டு இருந்தான்...’’“மொதல்ல எங்களுக்கு யாருக்கும் சந்தேகமே வரலை. பக்கத்து ஊருக்காரனா இருக்கும்னுதான் நெனச்சோம் கேட்டியளா?”
‘‘ஆனா, பொறவு பார்த்தா, இவன் சாப்பிடுதான். சாப்பிட்டுப் போட்டு அப்படியே மெதுவா காணாமப் போயிடுதான். ‘சுபுஹு’ பாங்கு சொல்லுறதுக்குள்ள ஆளே காணோம். சலாம் சொன்னா கூட ஒழுங்கா பதில் சலாம் சொல்லத் தெரியலை...’’

‘‘அப்பத்தான் சலாம் காக்கா இவனை கொஞ்சம் கவனிச்சிருக்காரு. ‘பேரு என்ன வாப்பா?’ன்னு கேட்டதுக்கு ரஹ்மான்னு சொல்லியிருக்கான். சரி ‘வாப்பா பேரு என்ன?’ன்னு கேட்டதுக்கு முழிச்சிருக்கான். பொறவுதான் யோசிச்சு அல்லாபிச்சைன்னு சொல்லியிருக்கான். அவருக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகமாயி ‘உம்மா பேரு என்னலே?’ன்னு கேட்டதுக்கு ‘எனக்கு உம்மா இல்ல’ன்னு சொல்லியிருக்கான். ‘எந்த ஊருலே?’ன்னு கேட்டதுக்கு ‘விசலாமரம்’னு சொன்னதும்தான் சலாம் காக்காவுக்கு சந்தேகமா போயி காதர் அண்ணன் கிட்ட சொல்லியிருக்காரு...’’‘‘ஆமா ஹாஜியார் காக்கா, விசலாமரத்துல துலுக்கன் எங்க இருக்கான்? அதான் எனக்கு சந்தேகமாப் போச்சு!’’

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆளாளுக்குக் கொஞ்சம் நடந்ததை எடுத்துச் சொல்ல, ‘‘சரி அதுக்கு..?’’ என்றார் ஹாஜியார்.
‘‘என்ன ஹாஜியார் அப்படிக் கேக்குறீங்க? நம்ம பள்ளிவாசலுக்குள்ள நம்மாளு இல்லாத ஒரு காஃபிர் வந்து, நாம நோம்புக்கு ‘சஹர்’ செய்யுற நேரத்துல நம்ம கூட வந்து சாப்பிட்டு நம்மள ஏமாத்துறான். என்னன்னு சாதாரணமா கேக்குதீங்க?’’ என்றார் முகமது மாஸ்டர்.

எப்போதுமே முக்கியமான நேரத்தில் குரல் கொடுத்து அவரது மகிமையை நிலைநாட்டுவதை எண்ணி மாஸ்டரின் ஆதரவாளர்கள் இன்னொருமுறை பெருமை பொங்க மாஸ்டரைப் பார்க்க மாஸ்டரும் புன்னகை தவழ அதை ஏற்றுக் கொள்பவர் போலத் தலையசைத்தார்.
‘‘தம்பி இங்க வாப்பா...’’ என்றார் ஹாஜியார்.

அந்தத் தம்பி நடுக்கத்தோடு தரையிலிருந்து எழுந்து வந்தான்.‘‘நீ இசுலாமியனா இல்லையா?’’ ஹாஜியார் குரல் மென்மையாக ஒலித்தது.‘‘இல்லீங்கண்ணாச்சி... என்னை மன்னிச்சுடுங்க அண்ணாச்சி...’’ குரல் தழுதழுத்தது அவனுக்கு.‘‘இது முசுலீம்கள் பள்ளிவாசல்னு உனக்குத் தெரியாதாப்பா?’’ மீண்டும் அதிராத மென்மையான குரலிலேயே கேட்டார் ஹாஜியார்‘‘தெரியும் அண்ணாச்சி...’’ தலையைக் கவிழ்ந்து கொண்டான் அவன்.

தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் குற்றவுணர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தன.‘‘இங்க பாரு தம்பி. அழுது என்ன புண்ணியம்? தப்புன்னு தெரிஞ்சும் எதுக்குப்பா பள்ளிவாசலுக்கு வந்தே?’’

‘‘தப்புதான் அண்ணாச்சி... தெரியாம செஞ்சுப்புட்டேன். தப்புதான்...’’ மீண்டும் மீண்டும் அதையே முணுமுணுத்தன அவனது உதடுகள்.
‘‘பாருங்களேன் திமிரை. செய்யுறதையும் செஞ்சுட்டு மொதலக் கண்ணீரு வுடுறான்...’’ என்றார் சலாம். கூட இருந்தவர்களும் ஆமோதித்து முணுமுணுக்க ஹாஜியார் மெல்லத் திரும்பி அவர்களைப் பார்த்ததும் மீண்டும் அங்கே அமைதி நிலவியது.

‘‘சரி தம்பி. தப்பு செஞ்சிட்டீங்க. இனிமே இந்த மாதிரி செய்யாதீங்க என்ன?’’ என்றார் ஹாஜியார்ஓடி வந்து மீண்டும் அவர் காலில் விழுந்தான் அவன். ‘‘ஐயா என்னை மன்னிச்சிடுங்கய்யா. நான் தெரிஞ்சே இந்தத் தப்பை செஞ்சுட்டேன்யா. என்னால ஏதாவது தெய்வக் குத்தம்னா என்னை தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்கய்யா...’’ அவனது கதறல் அந்த அதிகாலை நேரத்தை கனமாக்கிக் கொண்டிருந்தது.

அவனை மெதுவாகக் கைத்தாங்கலாக உயரத் தூக்கினார் ஹாஜியார். ‘‘தெய்வக் குத்தம்லாம் ஒண்ணும் இல்ல. அதெல்லாம் மனுசங்களா நெனச்சுக்கறதுதான். நீனும் மனுசன் நானும் மனுசன்தானே? அதனால் தப்பெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா, உனக்கு இங்க வரக்
கூடாதுன்னு தெரிஞ்சும் வந்திருக்கியே, என்ன காரணம்?’’

ஹாஜியார் கேட்டதும் கையால் முகத்தை மூடிக் கொண்டு அழுதான் அவன். அந்த மெல்லிய உடல் குலுங்குவதையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். மெல்ல அவனருகே சென்று, ‘‘தம்பி, எதுக்காக அழணும்? காரணத்தை மட்டும் சொல்லு...’’
பேச முடியாமல் தொடர்ந்தும் அழுதான் அவன். அவன் அழுகை அடங்கட்டும் என்று ஹாஜியார் காத்திருந்தார். அவனது உடல் குலுங்கி நின்றதும் மெதுவாகக் கேட்டார். ‘‘தம்பி, இப்பவாவது சொல்லலாமா?’’

‘‘என்ன சொல்றது அண்ணாச்சி... எழவெடுத்த பசி... நாலு நாளாவுது நானும் என் தம்பியும் சாப்பிட்டு. வெவசாயக் கூலிக்குப் பொழைக்குறவன் அண்ணாச்சி. மழையில்லாம வெவசாயமும் இல்ல வேலையும் இல்ல. கூலி வேலை செஞ்சும் ஒண்ணும் மிஞ்சலை. காலைல வேல தேடி வரக்குள்ள இங்க எல்லாம் காலைல நோம்புக்காக சாப்பிடுதாங்கன்னு தெரிஞ்சு போச்சு.

அதான் நானும் கூட்டத்தோட வந்து கொஞ்சம் சாப்பிட்டுட்டு தம்பிக்கும் கொஞ்சமா ஒளிச்சு கொண்டு போய் குடுத்தேன் அண்ணாச்சி. உங்க ஆட்கள் புண்ணியத்துல மூணு நாளா அரை வயித்துக்குச் சாப்பிட்டோம். பண்ணுதது தப்புன்னு எனக்கு தெரிஞ்சுது அண்ணாச்சி. ஆனா, எங்க பாழாப் போன வயித்துக்கு எதுவும் தெரியலை. எங்களை மன்னிச்சிடுங்க!’’ என்று அவன் அழுதபோது ஹாஜியார் கண்களும் கலங்கிப் போயிருந்தன.
கொஞ்ச நேர அமைதிக்குப் பின் ஹாஜியார் கூடியிருந்தவர்களைப் பார்த்தார்.

‘‘என்ன மாதிரி ‘ஈமான்’ உள்ளவங்க நீங்க எல்லாம்னு எனக்குப் புரியலை! நோன்பு எதுக்காக வைக்குறோம்னு கூடத் தெரியாம நோன்பு வச்சு நீங்கல்லாம் என்னத்த சாதிக்கப் போறீங்களோ?! இல்லாதவனோட பசியையும், ராணுவத்துல கஷ்டப்படுறவனோட தாகத்தோட அருமையையும் புரிஞ்சுக்கறதுக்குத்தான் நோன்பு. இல்லாத ஒருத்தன் பசிக்காக உங்ககூட உட்கார்ந்து சாப்பிட்டா, அவனை மரத்துல கட்டி வச்சு அடிச்சுட்டு, நீங்க வைக்குற நோன்பை அந்த ஆண்டவன் எப்படி ஏத்துக்குவான்னு நினைக்குறீங்க?

பசிச்சவனுக்கு ஒருவாய் சோறு போட வக்கில்லாம தலைல தொப்பிய வச்சுக்கிட்டு முஸ்லீம்னு சொல்லிக்கிட்டு திரியாதீங்க. எவனையும் அடிக்குறதுக்கு முன்னால என்ன ஏதுன்னு விசாரிங்க. விடிஞ்சும் விடியாமலும் ஒருத்தன் பள்ளிவாசலைத்தேடி வந்து சாப்பிட வந்திருக்கான்னா அவன் எந்தளவு பசியோட இருந்திருக்கணும்னு யோசிச்சிருந்தா இவனை அடிக்க உங்களுக்கெல்லாம் மனசு வந்திருக்காது. எதையும் அறிவோடயும் மனுசத்தனத்தோடயும் பாருங்க மொதல்ல!’’ ஹாஜியாரின் குரலில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

‘‘இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க. இந்தத்தம்பி நோன்பு முடியப் போற மீதி நாளுக்கும் அவன் தம்பியோட இங்கதான் சஹர் பண்றதுக்கு வருவான். இல்லாத அவனோட பசிக்கும் சேர்த்து நாம சோறு போட்டா நாம ஒண்ணும் குறைஞ்சு போயிடமாட்டோம்... புரிஞ்சுதா? மோதியாரப்பா... தம்பியப் பாத்துக்கிடுங்க!’’

சொல்லிவிட்டு நகர்ந்தவர் அவனிடம் போய், ‘‘நாளைலேருந்து உன் தம்பியையும் கூட்டிக்கிட்டுவா தம்பி. தலைல தொப்பி எல்லாம் போட வேண்டாம் புரிஞ்சதா?’’ என்று அவன் கன்னத்தை மெல்லத் தட்ட அந்தக் கைகளைப் பிடித்துக் கொண்டவனின் கண்கள் நிறைந்து போயிருந்தன.

பாக்கெட் மணி நடிகை!

இன்று ரகுல் ப்ரீத் சிங்குக்கு அறிமுகம் தேவையில்லை. தென்னிந்தியாவின் டாப் 5 நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தெலுங்கு, தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது இந்தியிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவை எல்லாம் நமக்குத் தெரியும். போலவே மாடலிங்கில் இருந்து நடிப்புக்கு வந்தார் என்பதும்.

ஆனால், முதன் முதலில் படத்தில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டார் தெரியுமா..?பாக்கெட் மணிக்காக!இப்படித்தான் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆக, பாக்கெட் மணி தேவைப்படவில்லை என்றால் ரகுல் நடிகை ஆகி இருக்க மாட்டார்!

வாழ வைத்த ஸ்டிராய்ட்!

விளையாட்டு வீரர்கள் ஸ்டிராய்ட் பயன்படுத்தினால் அது குற்றம்.ஆனால், அதே ஸ்டிராய்ட்தான் முன்னாள் மிஸ் யூனிவர்ஸான சுஷ்மிதா சென் உயிர் வாழவே காரணம்!யெஸ். 2011ம் ஆண்டு வெளியான ‘நோ ப்ராப்ளம்’ படத்துக்குப் பின் வேறு எந்த சினிமாவிலும் சுஷ்மிதா நடிக்கவில்லை. காரணம், அவரைப் பாதித்த நோய். அட்ரினல் க்ரைசிஸால் அவதிப்பட்ட அவர், எட்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை ஸ்டிராய்ட் எடுத்துக்கொண்டே தீர வேண்டும். இதனால் அவரது பிபி அதிகரித்தது. முடிகள் கொட்டின.

ஆனால், 2016ல் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவர் உடல் கார்டிசாலை மீண்டும் சுரக்கத் தொடங்கியது. எனவே ஸ்டிராய்டை நிறுத்தினார்.
இப்போது சுஷ்மிதா சென்னின் உடல்நிலை தேறி வருகிறது.

45 வயது ஹாட் கேக்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘உயிரே...’ படம் நினைவில் இருக்கிறதா..? அதில் இடம்பெற்ற ‘தைய தைய தையா தையா...’ ரயில் பாடல்..?
யெஸ். ஜிகுஜிகு கலர் உடையில் அப்பாடலுக்கு நடனமாடிய மலைக்கா அரோராவுக்கு இப்போது வயது 45.

படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ... தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது ஹாட் படங்களை வெளியிட்டு தெறிக்க விடுகிறார்!அப்படியொரு ‘சூடு’தான் இங்கு வெளியாகி இருக்கும் படம்!என்னம்மா... இப்படி பண்றீங்களேமா?!

- ஆசிப் மீரான்