பெண்களைப் பாதுகாக்கும் அலர்ட் கருவி!



எங்கும் எதிலும் அலர்ட் மோடிலேயே இருக்க வேண்டிய கட்டாயம். வேறு வழியில்லை. இன்றைய சமூக அமைப்பு அப்படி. அதிலும் பெண்கள் நிலையோ வெறும் பெப்பர் ஸ்பிரே அல்லது மிளகாய்ப் பொடியெல்லாம் கூட வேலைக்கு ஆகாது என்கிற நிலைதான்.
நிச்சயம் இவற்றை மிஞ்சிய ஒரு அப்டேட் வேண்டும்.

சந்தையில் நிறைய டெக்னாலஜி வஸ்துகள் உள்ளன. எனினும்அவை இருக்கும் லொகேஷனைச் சுற்றி இருப்போருக்கு வெறும் 500 மீ அளவில் மட்டுமே ஒலி எழுப்பி தெரியப்படுத்தும். திருடனோ, கொலைகாரனோ அப்படி 500 மீ அளவில் கத்தி ஒலி எழுப்பும் பகுதியிலா தவறுகள் செய்வார்கள்..? இதற்கான தீர்வாகத்தான் வந்திருக்கிறது ‘மைஹீரோ டிஸ்ட்ரஸ் அலர்ட்’ (MyHero Distress Alert).

‘‘கொஞ்சம் பெரிய சைஸ் இன்ஹேலர் போன்ற டிவைஸ். இதனுடன் ஒரு சின்ன டேக். இதை நீங்க கழுத்தில், ஹேண்ட்பேக், இருசக்கர வாகன கைப்பிடினு எதுல வேணும்னாலும் மாட்டிக்கலாம்.பிரச்னை அல்லது ஆபத்துனா இந்த டிவைஸோட மேல் பக்க கவரை இழுத்தா போதும். அலர்ட் மணி அடிக்கும். இருக்கிற லொகேஷனையும் நண்பர்கள், உறவுகளுக்கு தெரியப்படுத்தும்.

அதே நேரத்தில் மொபைலில் இருக்கும் ஆடியோவும் வீடியோவும் ஆன் ஆகி, நடக்கும் பிரச்னைகளை ரெக்கார்ட் செய்யும். இந்த ஆப்ஷனும் மைஹீரோ டிவைஸில் இருக்கு...’’ என்று சொல்லும் இந்த டிவைஸை விற்பனை செய்யும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான பிரசாத், மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘iOS, ஆண்டிராய்டு... ரெண்டு மொபைல்கள்லயும் இந்த டிவைஸ் வேலை செய்யும். இதுகூட ஒரு ஆப்ளிகேஷனையும் டவுன்லோடு செய்து ஆபத்து காலத்துல யாருக்கு தெரியப்படுத்தணுமோ அவர்களுடைய மொபைல் எண்களை பதிவு செய்துக்கலாம்.இதுல இன்பில்ட் லொகேஷன் டிராக்கர் இருக்கு.

ஒருமுறை நீங்க டிவைஸை இழுத்தா அடுத்த நொடி சம்பந்தப்பட்ட உங்க சொந்தங்களுக்கு லைவ் லொகேஷன் SOS (save our souls) மெஸேஜா போயிடும். அதோட மொபைல் ஆப்ளிகேஷன் ஆன் ஆகி ஸ்மார்ட் போன் வாய்ஸ் ரெக்கார்டர், கேமரானு எல்லாம் ஓபன் ஆகிவிடும். இதனால தேவைப்படும் ஆதாரங்கள் எல்லாம் பதிவாகிடும்!’’ என்கிறார் பிரசாத். இப்போது அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் மட்டுமே இந்த டிவைஸ் விற்பனைக்கு உள்ளது. விரைவில் கடைகளிலும் கிடைக்கும்!     

ஷாலினி நியூட்டன்