5 அஞ்சு பன்ச் -பிரகாஷ்ராஜ்1.எங்கேயிருந்தாலும் மகன் சூர்யாவின் நினைவு நாளுக்கு அவன் துயிலும் இடத்திற்கு வந்து அமர்ந்துவிடுவார். அன்று முழு நாளும் மௌனம்தான்.

2.நவீன தமிழ் இலக்கியத்தில் தீவிர விருப்பம் உடையவர். முக்கிய நூல்களைப் படித்துவிடுவார்.

3.தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியும். அதனால் அவர் வீட்டில் சேகரித்திருக்கும் நூலகம் அரிய வகை சேகரிப்பு கொண்டது.

4.சமீபத்தில் தேர்தலில் போட்டியிட்ட பிறகு ஒதுங்கி இருந்தவர், இப்போது வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் நடிக்கிறார்.

5.தாய் மீது மிகப்பெரிய பற்று உண்டு. பத்து நாட்களுக்கு மேல் ஷூட்டிங் போனால் அம்மாவைப் பார்க்காமல் தாளாது. ஷூட்டிங் ஸ்பாட்டில், தான் தங்கும் இடத்திற்கே அம்மாவை அழைத்து வந்துவிடுவார்.

நன்மதி