கட் அவுட் வைக்கலாம்!‘சிறு வயதில் ஓவியனாக விரும்பினேன்...’ என்று தோனி சொன்ன ரகசியத்தில் அதிசயித்துப் போனோம். அவர் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; கருணாகரன், போரூர்; மனோகர், மேட்டுப்பாளையம்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு படத்தில் நடித்து முடித்ததோடு சரி... அதன் பிறகு அப்படத்தைப் பார்க்கும் ரசிகர்களை ஹீரோக்கள் கண்டுகொள்வதேயில்லை என்றிருக்கும் அலட்சியப் போக்கை கண்டிக்கும் கட்டுரையை வெளியிட்டதற்கு கட் அவுட் வைக்கலாம்!  
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; பிரேமா குரு, சென்னை; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; அமிர் பத்ரா, சென்னை.

புதிய அரசு தீர்க்க வேண்டிய டாப் பிரச்னைகளை முன்வைத்த தங்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.
- பிரேமா குரு, சென்னை; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; இப்ராகிம், சென்னை; இலக்சித், மடிப்பாக்கம்; க.நஞ்சையன், பொள்ளாச்சி; ப.மூர்த்தி, பெங்களூரு; ரவிக்குமார், பொள்ளாச்சி; த.சத்திய நாராயணன், அயன்புரம்.

இந்தியாவில் மூன்று நாட்களுக்கு ஓர் அரசியல் கொலை நடக்கிறது என்பதைப் படித்த போதே உடல் நடுங்கியது.
- பப்பு, அசோக் நகர்; மியாவ்சின், கே.கே.நகர்; கவுரிநாத், பரங்கி
மலை; புகழ்மதி, ஆதம்பாக்கம்; முரளி, நங்கநல்லூர்; பிரேமா குரு, சென்னை.

நீச்சல் மன்னன் ஷு பிவுவைப் பற்றிய தகவல்கள் சிறப்பு.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்; ஆத்மநாதன், ஆற்காடு; தெய்வசிகாமணி, வேளச்சேரி; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

‘நெக்’ பனியனுக்குள் நுழைந்து கொள்கிற எல்லா பெண்களாலும் நயன்தாராவைப் போல் ‘கிக்’ ஏற்றிவிட முடியாது என்பதை நிரூபிக்கிறது, அட்டைப்படமும், ப்ளே ஸ்டோரும்.
- அமிர் பத்ரா, சென்னை, ஜெயசந்திரபாபு, சென்னை; கருணாகரன், போரூர்.

உயிர் பறிக்கும் சாலை விபத்துகளின் பின்னணியை அலசி ஆராய்ந்த கட்டுரை திகைப்பையும் கவலையையும் அளித்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆத்மநாதன், ஆற்காடு; கருணாகரன், போரூர்.

வடிவேலுவின் ‘அஞ்சு பன்ச்’ அசத்தல் ரகம்.
- கருணாகரன், போரூர்; மனோகர், மேட்டுப்பாளையம்.