ஹிட்லரின் ஓவியங்கள்!உலக சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஒரு பெயர் ஹிட்லர். லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரி ஹிட்லரைத்தான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அவர் ஓர் ஓவியர். பெரிய ஓவியராக வேண்டும் என்பது குழந்தைப்பருவ ஹிட்லரின் கனவு. அதற்கான வசதிகளோ வாய்ப்புகளோ அவருக்கு இல்லை.

வாழ்வாதாரத்துக்காக பதின்பருவத்தில், தான் வரைந்த ஓவியங்களை அவரே விற்றிருக்கிறார். நினைத்த அளவுக்கு கலைத்துறையில் ஜொலிக்க முடியவில்லை என்ற வருத்தம் மரணமடையும் வரை அவரைத் துரத்தியிருக்கிறது. இளம் பருவத்தில் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் இரண்டு முறை அவர் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஹிட்லர் வரைந்ததாக நம்பப்படும் ஐந்து வாட்டர் கலர் ஓவியங்கள் ஜெர்மனியில் ஏலமிடப்பட்டன. ஓவியத்தை வாங்க ஒருவர் கூட முன்வரவில்லை!

த.சக்திவேல்