கடலுக்கடியில் சுரங்கப்பாதை!ராட்சத பனிப்பாறைகளும், ஆயிரக்கணக்கான கழிமுகங்களும், அழகழகான மலைகளும், நூற்றுக்கணக்கான நீர்நிலைகளும் சூழ்ந்த ஓர் ஆச்சர்ய நிலப்பகுதி நார்வே. சுமார் 53 லட்சம் பேர் வாழும் இந்நாட்டில் சாலைப் போக்குவரத்து என்பது சற்று சிக்கலானது. காரணம், மேலும் கீழுமான அதன் நிலப்பகுதிகளும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் அதன் ஆறுகளும்தான்.

காரில் 100 கிமீ தூரம் பயணிக்கவே மூன்று அல்லது நான்கு மணி நேரமாகும். அதனால் மக்கள் படகுப் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். இந்நிலையில் கடலுக்கடியில் கான்கிரீட்டில் சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்தை நவீனமாக்கப் போகிறது நார்வே.

கடலுக்குள் 30 மீ ஆழத்தில், 27 கிமீ தூரத்துக்கு நீண்டு செல்லும் இந்தப் பாதையை அமைப்பதற்கான பட்ஜெட் மட்டுமே 40 பில்லியன் டாலர்கள். அதாவது ரூ.2.7 லட்சம் கோடி! 2050க்குள் இந்தப் பாதையை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது இலக்கு!           

த.சக்திவேல்