இந்த டிசைன்ஸாலதான் எயிட்டீஸ் ஹீரோயின்ஸ் பத்தி இப்பவும் பேசறோம்!அதே. எப்போதும் துள்ளல் லுக், ஜாலி மோடை விரும்புகிறவர்களும், படபடக்கும் இதயம் கொண்டவர்களும் காலம்தோறும் டிக் அடிப்பது பட்டர்ஃப்ளை, ஃபிரில், ஃப்ளட்டர்... எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் தையல் கட்டிங் மெதடைத்தான்!
80களில் கோலோச்சிய இந்த ஃபேஷன் டிரெண்ட், இன்றும் மவுசு குறையாமல் இருக்கிறது. ‘‘யெஸ்... என்றும் இதற்கு மவுசு குறையாது...’’ என அடித்துச் சொல்கிறார் டிசைனர் காவ்யா ரெட்டி.

‘‘ஒரு தலையணை உறையைச் சுத்தி ஏதாவது ஒரு துணியை வைச்சு சின்னச் சின்ன வளைவுகளா தைச்சுக் கொடுங்க... அந்தத் தலையணை யாருக்குனு குட்டீஸ் மத்தில பெரும் போட்டியே நடக்கும்!

காரணம், சட்டுனு ஈர்க்கக் கூடிய அழகும், ஸ்டைலும், லுக்கும் இந்த ஃப்ரில் ஃபேஷனுக்கு உண்டு. சாதாரண பைப்பிங் கொடுக்கறதுக்கு பதிலா அதுல மைக்ரோ ஃபிரில் வெச்சு ஒரு பிளவுஸ் போட்டுப் பாருங்க... ஆளையே அசத்தும்!

வெஸ்டர்ன், டிரெடிஷனல், இண்டோ - வெஸ்டர்ன்னு எல்லாத்துக்கும் சூட் ஆகும் டிசைன் இது. 80ஸ் ஹீரோயின்ஸ் இப்பவும் நினைவுகூரப்பட இந்த ஃப்ரில் ஃபேஷன் முறையும் ஒரு காரணம்...’’ என்று அடுக்கும் காவ்யா ரெட்டி, இதிலேயே வகைகள் இருக்கின்றன என்கிறார்.
‘‘தோள்பட்டைல இருந்தே லூசா ஆரம்பிச்சு கைகள் முழுக்க லூசா சில வகைகள் இருக்கும். இதை பெல் மெதட்னு ஃபேஷன் லாங்குவேஜ்ல சொல்லுவோம்.

வேறு சில வகை கை முழுக்க நீளமா வந்து நுனில மட்டும் ஃபிரில் டிசைன் கொண்டிருக்கும். ஒல்லியான பெண்கள் டிசைனர் சேலைகள் எடுத்து பிளவுஸ் துணியை உடலுக்கு மட்டும் ரெடி செய்துட்டு ஸ்லீவை புடவை துணில லூசா இந்த பெல் மெதட்ல வெச்சா... இந்தி நடிகைகளே வெக்கப்படற அளவுக்கு மிரட்டுவாங்க!

இந்தப் பாணிலதான் சமீபத்துல சோனம் கபூர் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து எல்லார் பார்வையையும் தன் பக்கம் திருப்பினாங்க. சமந்தா கூட இந்த வகை பிளவுஸை பயன்படுத்தறாங்க. சும்மா ஒரு லெக்கிங்... அதுல கீழ ‘V’கட் பண்ணிட்டு லெக்கிங் கலர் அல்லது டாப் கலருக்கு ஒரு சின்ன ஃபிரில் இணைச்சா வேற லெவல் லுக் கிடைக்கும்.

கொஞ்சம் பருமனான பெண்கள் உடை, ஸ்லீவ்னு எல்லாத்தையும் கொஞ்சம் லூஸா போட்டுக்கிட்டா கேஷுவல் லுக் கிடைக்கும்.  ஒல்லியான பெண்கள் உடையோட ஹெம்லைன் என்கிற கீழ் நுனிகள்ல கூட இந்த ஃபிரில் டிசைன்களை இணைச்சுக்கலாம். அதே மாதிரி உடைக்கு கிராஸ்ல, ஷோல்டர் காலர், கிராப் டாப்ஸ்ல, இடைப்பகுதில கூட ஃபிரில் ஃபேஷன் பயன்படுத்தலாம்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... வயசு ஒரு விஷயமே கிடையாது. உங்க வயசைக் குறைக்கத்தான் இந்த ஃபிரில் டெக்னிக்! யோசிக்காம பயன்படுத்துங்க. போரிங் பிளாட் ஸ்லீவ் அல்லது உடை டிசைன்களுக்கு டாட்டா சொல்லுங்க...’’ என கண்ணடிக்கிறார் காவ்யா ரெட்டி.   

ஷாலினி நியூட்டன்