Coffee Table
சென்னையில் சன்னி!
இனிக்கும் புத்தாண்டு வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது சன்னி லியோனின் இன்ஸ்டா பக்கம். டிசம்பர் 31ம் தேதி மகாபலிபுரத்தில் நடக்கும் கலர்ஃபுல் ஃபங்ஷனில் சன்னியும் கலக்கல் டான்ஸ் ஆடினார். இதற்கான அறிவிப்பை இன்ஸ்டாவில் தட்டிவிட்டு லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளியிருக்கிறார்.
உலகின் முதல் ஸ்மார்ட்போன்!
ஸ்நாப்டிராகன் 855 திறன் மற்றும் 12ஜிபி ரேமுடன் வெளிவரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது ‘லெனோவா Z5 ப்ரோ ஜிடி’. 6.39 ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 128ஜிபி - 512 ஜிபி ஸ்டோரேஜ், 16 மற்றும் 24 எம்பியில் இரண்டு பின்புற கேமராக்கள் என்று ஐபோனின் புதிய மாடலுக்குப் போட்டியாக இதைக் களமிறக்குகிறது ‘லெனோவா’. மினி டேப்லட் போல இதை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள். விலை ரூ.27,700லிருந்து ஆரம்பிக்கிறது.
டூபா!
ஜெர்மனியின் புகழ்பெற்ற இசைக்கருவி ‘டூபா’. ஓர் இடத்தில் 100 பேர் ஒன்றுகூடி ஒரே மாதிரி டூபாவை வாசிப்பதே அசாதாரணமான விஷயம். இந்நிலையில் அமெரிக்காவில் 835 டூபா பிளேயர்கள் ஒன்றுகூடி கிறிஸ்துமஸ் பாடலான ‘சைலன்ட் நைட்’டை ஒரே மாதிரி வாசித்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இந்த 835 பேரில் 11 வயது சிறுவனும் 86 வயது முதியவரும் அடக்கம்! இந்த அரிய நிகழ்வை ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் கண்டு ரசித்து வைரலாக்கிவிட்டனர்.
வீட்டுக்கு அருகில் வேலை!
‘‘வீட்டுக்கு அருகிலேயே வேலை செய்தால் வாகன பயன்பாடு குறையும். அதனால் 2030க்குள் 214 மில்லியன் டன் கார்பன்-டை- ஆக்சைடு வாயுவைக் குறைக்கலாம்...’’ என்கிறது ஓர் ஆய்வு.‘‘வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலை செய்வதற்கான இடங்களை ஒதுக்குவதன் மூலம் பூமி சூடாகும் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்...’’ என்கிறது இன்னொரு ஆய்வு.இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு முன்னோடியான நார்வே அரசு, ஒஸ்லோ நகரில் 700 கார் பார்க்கிங் இடங்களை தகர்க்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
கிஸ் கிஸ் பாயல்!
தெலுங்கில் ‘ஆர்.எக்ஸ்.100’ படத்தில் லிப்லாக் ரொமான்ஸில் சுண்டி இழுத்த ஹீரோயின் பாயல் ராஜ்புத், தமிழிலும் இரண்டு படங்கள் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்புக்காக பனிமழை பொழியும் சிக்கிம் சென்று வந்திருக்கிறார் பாயல். அங்கே மலை உச்சியில் தவழும் மேகக்கூட்டங்களை எல்லாம் தனது மொபைலில் படம் பிடித்து ஃபிளையிங் கிஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். அதை தன் இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட, ஆயிரக்கணக்கான லைக்குகளும் ஹார்ட்டின்களும் குவிகின்றன.
- குஙகுமம் டீம்
|