ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி!Unity of Spinal என்பதை தவறுதலாக எங்கள் ஆசிரியர் குழு இப்படி தமிழாக்கம் செய்திருக்கிறது. தவறுக்கு வருந்துகிறோம்!

*தோள்பட்டை எலும்புகள், தசை, முதுகெலும்பு ஆகிய முக்கிய பாகங்கள் நமது முதுகில் உள்ளன.

*மேற்புறத் தசை, நடுப்பகுதித் தசை, உட்புறத் தசை என முதுகுத் தசையில் மூன்று அடுக்குகள் உள்ளன.

*மேற்புறத் தசையை ட்ராபீசியஸ், லட்டிசீமஸ் டோர்சி, ரோம்பாய்டு மேஜர், ரோம்பாய்டு மைனர் மற்றும் லேவேட்டர் ஸ்கேபுலே என்று மேலும் சில பகுதி களாகப் பிரிக்கிறார்கள்.

*ஸ்பினோட்ரான்ஸ்வெர்சேல்ஸ், எரெக்டர் ஸ்பைன், ட்ரான்ஸ்வெர்சோ ஸ்பினேல்ஸ், செக்மண்டல் மசில்ஸ் என உட்புறத் தசையையும் பிரித்திருக்கிறார்கள்.

*தசை, தசைநார்கள், தசை நாண்கள், வட்டு எலும்புகள், எலும்புகள் ஆகியவை இணைந்த நீண்ட எலும்புத் தொடர் அமைப்பே முதுகெலும்பு.

*பளுவானவற்றை சுமக்கும்போதும், பளுவானவற்றைத் தவறான முறையில் தூக்கும்போதும், எசகுபிசகாக முதுகை வளைக்கும் போதும் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

*முதுகு எலும்பில் உள்ள வட்டுகள் சிதைவது, வீங்குவது, சியாட்டிகா, ஆர்த்ரைடிஸ், வித்தியாசமாக முதுகெலும்பு வளைந்திருப்பது, ஆஸ்ட்டியோபோரோசிஸ் ஆகியவை முதுகெலும்பில் ஏற்படும் முக்கியமான பிரச்னைகள்.

*அதிகமான முதுகுவலி இருப்பவர்கள் வெள்ளை சர்க்கரையை தவிர்த்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

*நடுப்பகுதி தசை செரேட்டஸ் போஸ்டீரியர் சுப்பீரியர் மற்றும் இன்ஃபீரியர் என்ற இருவகைகளால் ஆனது.

*பால், முட்டையின் வெள்ளைக் கரு, நட்ஸ் ஆகியவற்றில் முதுகெலும்பை வலுவாக்கும் கால்சியம் உள்ளது.

மாடல்: நடிகை ஹர்ஷிதா பன்வர்

லயா