இது க்ராண்ட் தீபாவளி மாமூ!ஹேப்பி மோடில் சஞ்சரிக்கிறார் வரலட்சுமி. ‘சர்கார்’ மெகா சக்சஸ்தான் அதற்குக் காரணம். ‘‘யெஸ்... இது க்ராண்ட் தீபாவளி! விஜய் சார், முருகதாஸ் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார்னு பிடிச்ச பல சார்ஸ் காம்பினேஷன்ல நானும் இருந்திருக்கேன்!’’ மலர்கிறார். 
‘‘மார்ச் மாசம் என் பர்த்டே வரும். சரியா இந்த வருஷம் என் பிறந்தநாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி முருகதாஸ் சார் கூப்பிட்டார். போனேன். ‘நீங்க பிசினு தெரியும். உங்களால
‘சர்கார்’க்கு பல்க்கா டேட்ஸ் தர முடியுமா’னு கேட்டார். ‘எவ்வளவு படங்கள் இருந்தாலும் உங்க படத்துல நடிக்க ரெடி’னு சொன்னேன். சிரிச்சார்.

சரியா பர்த்டே அன்று அவர்கிட்ட இருந்து நியூஸ் வந்தது, ‘நீங்க ‘சர்கார்’ல இருக்கீங்க’னு! இதைவிட வேறென்ன பிறந்தநாள் பரிசு வேணும்!’’ புருவம் உயர்த்திக் கேட்கும் வரலட்சுமி, ஸ்பாட்டில் முருகதாஸ் அமைதியாக இருப்பார் என சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார். ‘‘அடிப்படைல நான் விஜய் சார் ரசிகை. அவர் படத்துல நடிப்பது என் கனவு.
ஆசை. லட்சியம். அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும்னு நினைச்சுக் கூட பார்க்கலை! எவ்வளவு உயரத்துல இருக்கார்... ஆனா, துளிக் கூட பந்தா கிடையாது! செட்டுல சைலன்ட்டா இருப்பார். ஆனா, டைரக்டர் ‘ஆக்‌ஷன்’ சொன்னதும் அப்படியே மாறிடுவார். அவரோட எனர்ஜியைப் பார்த்து மிரண்டுட்டேன்!

Silent speaks loudனு சொல்வாங்க. சுட்டுப் போட்டாலும் எனக்கு அது வராது! நான் லொட லொட டைப். மைண்ட் வாய்ஸைக் கூட சத்தமா பேசற ஆள்! ‘சர்கார்’ பார்த்துட்டு அவ்வளவு பாராட்டு குவியுது. எல்லாம் முருகதாஸ் + விஜய் சாருக்கு போய்ச் சேர வேண்டியது...’’ அடக்கமாகச் சொல்லும் வரலட்சுமியின் கைவசம் அரை டஜன் படங்கள் இருக்கின்றன.

‘‘ஒரே மாதிரி ரோல் பண்ண பிடிக்காது. வெரைட்டியான கதாபாத்திரம் கிடைச்சா விடமாட்டேன். ‘சண்டக்கோழி 2’ பேச்சி கேரக்டருக்கு தொடர்ந்து விஷ்ஷஸ் வந்துட்டு இருக்கு! குறிப்பா பெண்கள். எதிர்பாராத இடங்கள்ல இருந்தெல்லாம் பொக்கே வந்திருக்கு! இப்ப பண்ற ‘வெல்வெட் நகரம்’, ‘கன்னிராசி’, ‘ராஜபார்வை’, ‘மாரி 2’... அத்தனையிலும் இன்ட்ரஸ்டிங் ரோல்ஸ்...’’ அடுக்கும் வரூவுக்கு டிராவலிங்தான் ஹாபி.

மை.பாரதிராஜா