| ஜெட் வேகம்!
 
 
 ‘சீதக்காதி’யில் அய்யாவாக உருவெடுத்து அசத்தும் விஜய்சேதுபதி உண்மையிலேயே மாஸ் கிளாஸ் மக்கள் செல்வன்தான்!- சிதம்பரசெல்வன், திருநெல்வேலி; விபானா, சென்னை: வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நரசிம்மராஜ், மதுரை; அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை. 
 போலிகளை துகிலுரிக்கும் சரவண சந்திரனின் ‘சித்து விளையாட்டு’ முதல் அத்தியாயத்திலேயே ஜெட் வேக விறுவிறுப்பு.
 - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; தியாகராஜன், நாகப்பட்டினம்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; முரளிதரன், மதுரை.
 
 ‘ஏரியா லிட்ரேச்சர்’, லவ் கலாட்டாக்களை துள்ளல் இசையாக ஞாபகப்படுத்தியது.
 - ராஜசிவன், கோவை; லட்சுமி நாராயணன், வடலூர்.
 
 இரு பெண்களின் முதுகைப் பார்த்து காதல் நினைவு வரும் யுவகிருஷ்ணாவின் சிறுகதை செம சிரிப்பு.
 - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; சின்னஞ்சிறுகோபு, சேலையூர்; பூதலிங்கம், நாகர்கோவில்.
 
 மும்பை முந்திரி அமைரா எம்மாவுக்கு கொடுத்த உம்மா, எங்கள் இதயத்தை எகிறவைத்துவிட்டது!
 - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை.
 
 தலபுராணத்தில் தலைமை தபால்நிலையம் பற்றிய வரலாறு தித்திக்கும் தீபாவளி ஜாங்கிரி!
 - சின்னஞ்சிறுகோபு, சேலையூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
 
 சமூகத்திலுள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பேட் வுமன், கம்பீரக்குழுவாக ஜொலிக்கிறது.
 - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பூதலிங்கம், நாகர்கோவில்.
 
 பூச்சிமருந்துகளை எளிமையாக சொல்லித்தந்த ‘ஹோம் அக்ரி’ மன்னர்மன்னனுக்கு நன்றிகள் பல.
 - சரண்சுதாகர், கே.கே.நகர்; முருகேசன், கங்களாஞ்சேரி.
 
 மீம்ஸ் வழியாக பிரமாதமாக தமிழ் கத்துக்கிட்டோம் வாத்யாரே!
 - த.சத்தியநாராயணன், அயன்புரம்; முருகேசன், கங்களாஞ்சேரி.
 
 அக்ஷயா பாத்ரா நிறுவனத்தின் தூதராக பாசிட்டிவ் அலைகளை பரப்பும் திவ்யா சத்யராஜின் சமூகப்பணிகள் அசத்தல்.
 - மனோகா, திருச்சி; நரசிம்மராஜ், மதுரை; கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்; ஜனனிகார்த்திகா, திருவண்ணாமலை.
 
 ஹேண்ட்பேக்கின் நதிமூலம் அறிய உதவியது ஹேண்ட்பேக் ரகசியம் பகுதி.
 - ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; தியாகராஜன், நாகப்பட்டினம்; லட்சுமி நாராயணன், வடலூர்; அக்ஷயா கீர்த்திகா, திருவண்ணாமலை; கைவல்லியம், மானகிரி; மயிலை கோபி, அசோக்நகர்.
 
 
 
 |